சமூக வலைத்தளங்களில் அதிக ஆக்டிவ் செலிபிரட்டி பயனாளர்களை  கொண்டது "ட்விட்டர்". ஏனெனில் இங்குதான் சொல்ல வந்த விஷயங்களை "சார்ட் அண்ட் க்ரிஸ்பி"யாக சொல்ல முடியும். அதனால் தான் இது எப்போதும் பிரபலங்களில் சாய்ஸில் இது நம்மர் ஒன். எனவே தான் தங்களின் முக்கிய அறிவுப்புகளை பலரும் ட்விட்டரில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.





ஒரு பயனாளர் ஃபேஸ்புக் , யூடியூப் போன்ற தளங்களில் பணம் ஈட்ட முடியும், அது அவர்களை பின் தொடரும் பயனாளர்கள் மற்றும் அவர்கள் இடும் பதிவுகளை பொறுத்து அமைகின்றது. ஆனால் ட்விட்டரில் இந்த வகை வசதிகள் இல்லை.

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் பணம் ஈட்டுவதற்கான புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு "டிப் ஜார்" என பெயரிடப்பட்டுள்ளது.





"டிப் ஜார் " வசதியின் மூலம், யாரேனும் ஒருவர் இடும் பதிவு பிடித்திருந்தால் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நீங்கள் அன்பளிப்பு அதாவது "டிப்ஸ்" வழங்கலாம். இந்த "டிப் ஜார்" வசதி கணக்கு வைத்திருப்பவரின் "profile"பக்கத்தில் , "follow"பட்டனுக்கு அருகில் இருக்கும்.  அந்த ஐகானை க்ளிக் செய்தால் போதும்  அது "பேமண்ட் " தளத்திற்கு அழைத்துச்செல்லும் அங்கு விருப்பமான பேமண் தளத்தினை தேர்வு செய்து, நீங்கள் அவருக்கு கொடுக்க விரும்பும் பணத்தை அளிக்கலாம். paypal,bandcamp, cashap, patreon, venmo  உள்ளிட்ட  பேமண்ட் தளங்கள்  ஜார் டிப்போடு இணைக்கப்பட்டுள்ளது.



இது முதற்கட்டமாக ஆங்கிலத்தில் பதிவிடும் பத்திரிக்கையாளர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், படைப்பாளிகள், வல்லுநர்கள்  ஆகியோருக்கு வழங்கப்பட இருக்கிறது. முதலில் சோதனை முயற்சியாக  டுவிட்டரால் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்த வசதியை ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ் பயனாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ட்விட்டருக்கு எந்த லாபமும் கிடைக்காது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

"ஜார் டிப் " வசதியை எப்படி கண்டறிவது?

உங்களது "" உள்ளே சென்று "" என்ற வசதியை க்ளிக் செய்ய வேண்டும்

பிறகு கீழே " "  என கொடுக்கப்பட்டிருக்கும் , அதன் அருகிலேயே "" பட்டன் கொடுக்கப்பட்டிருக்கும் . அதனை க்ளிக் செய்ய வேண்டும்

பிறகு பணம் பெற்றுக்கொள்வதற்கான பேமண்ட் தளங்களில் (paypal,bandcamp, cashap, patreon, venmo)ஒன்றினை தேர்வு செய்யது, உங்கள் வங்கிக் கணக்கினை இணைத்துக்கொள்ளவும்.

இப்போது நீங்கள் டிப் பெறுவதற்கு தாயாராகிவிட்டீர்கள் !





சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கக்கூடிய இந்த "டிப் ஜார்" வசதி விரைவில் மற்ற மொழிகளுக்கும் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்  இந்த வசதி  அனைத்து பயனாளர்களுக்கும் வழங்கப்படும் பட்சத்தில் ட்விட்டரில் கூடுதல் பயனாளர்கள் இணைவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. சும்மாவே டுவிட்டர் சூடுபிடிக்கும். இதில் பணம் வேறு அனுப்பும் வசதி வந்துவிட்டதா, இனி கருத்துக்களும் அதற்கு ஏற்ப சன்மானமும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது