டுவிட்டர், இன்று பலரின் அதிகாரப்பூர்வ ஒலிபெருக்கியாகிவிட்டது. பிரபலங்கள் பலரும் தங்களின் கருத்துக்களை டுவிட்டர் மூலமாக மக்களிடத்தில் கொண்டு சேர்க்கின்றனர். சில நேரத்தில் முந்தித் தருகிறேன் என்கிற பேரில் தவறான தகவல்களை டுவிட்டரில் பகிர்ந்து, பின்னர் அதனால் விமர்சனங்களை சந்திக்கும் அவல நிலையும் பிரபலங்களுக்கு இருந்து வருகிறது. 




பிழை கொண்ட டுவிட்களை திருத்தும் வசதியை டுவிட்டர் இதுவரை வழங்கவில்லை. மொத்தமாக பதிவை நீக்கும் முறை மட்டுமே டுவிட்டரில் இருந்து வருகிறது. பதிவை திருத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என டுவிட்டர்கள் பலரும் அந்நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு டுவிட்டர் நிறுவனம் செவி சாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




 ஆனால் பிழை திருத்தும் சேவையை பணம் செலுத்தி சப்ஸ்கிரிப்ஷன் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்க டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதே சமயம் குறிப்பிட்ட சில பிராந்தியங்களுக்கு மட்டும் இந்த சேவையை கட்டண முறையில் வழங்கலாம் என டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான சோதனை முயற்சிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.