பள்ளிக்கு சென்றுவரும் உங்கள் வீட்டு குழந்தையிடம், "உன்னோட ஃபிரண்ட்ஷ் யார்" என்ற கேள்வியை முன்வைப்பது வழக்கம். அப்படி கேட்கும் கேள்விக்கு குழந்தைகள்  “ரோபோதான் என்னோட பெஸ்ட் ஃபிரண்ட்  “ என பதிலளித்தால் ஆச்சர்யர்ப்படுவதற்கில்லை. ஏனெனில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்ட்டில் டாமி (tommy)என்னும் புதிய ரோபோ பள்ளிக்கூடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  முதற்கட்டமாக  இந்த ரோபோ ஆட்டிசம் நிலையாளர்  குழந்தைகளுக்கு அடிப்படை விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுடன் எப்படி உரையாட வேண்டும், அந்த குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பயிற்சிகள் வழங்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுகிறது. சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்சிகளை வழங்குவது மட்டுமல்லாமல் வாய் மொழியாக சிலவற்றை சொல்லிக்கொடுக்கவும் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த  டாமி  (tommy) ரோபோ.




 ஒரு மாணவருக்கு என்ன குறைபாடு உள்ளது என்பதை அறிந்து அவர்களுக்கு ஏற்ற மாதிரியாக செயல்படுவது , அந்த மாணவருடன் முந்தைய வகுப்பில் உரையாடியதை நினைவு கூர்ந்து அதனை ரீ-கால் செய்வது போன்ற துல்லிய வேலைப்பாடுகளை ரோபோ செய்யும் அளவிற்கு புரோகிராம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாகவே ஆட்டிச நிலையில் இருக்கும் குழந்தைகள் தங்களுக்கான நண்பர்களை ஏற்படுத்திக்கொள்வதில் சிரமப்படுவார்கள் , அந்த குறை இனிமேல் அவர்களுக்கு இருக்காது என்கின்றனர் இதனை உருவாக்கிய  residency malta agency ஆராய்ச்சியாளார்கள். குறிப்பாக 7 முதல் 10 வயது வரை உள்ள கற்றல் குறைபாடு உள்ள  குழந்தைகளுக்குதான் டாமி  (tommy) ரோபோ பரிந்துரைக்கப்படுகிறது. 




டாமி (tommy) ரோபோவை உருவாக்குவதற்கு 85000 யூரோ செலவிடப்பட்டுள்ளது இதனை உருவாக்கிய நிறுவனம். இது இந்திய மதிப்பில் ரூ 73,45,191 ரூபாயாகும். இது education robo kids என்ற செயல்திட்டம் மூலம் அந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோவை உருவாக்குவதில்  residency malta agency  ஆராய்ச்சியாளர்களுடன் சில பேராசிரியர்களின் பங்கும் உள்ளது என கூறப்படுகிறது. டாமி (tommy) ரோபோவானது மூன்று கட்ட சோதனைக்கு பிறகே கல்வி நிறுவனத்தில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. முதலில் testing இரண்டாவதாக digital and connectivity  support மூன்றாவதாக education training. தற்போது களமிறங்கியிருக்கும் டாமி (tommy) டோபோ பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக இதே பெயரிலான ரோபோ ஒன்று  இத்தாலி மருத்துவமனையின் கொரோனா நோய்த்தொற்ற்ய் பிரிவில் செவிலியராக களமிறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ரோபோக்களின் வளர்ச்சி மற்றும் அதன் ஆளுமை என்பது சயின்ஸ் ஃபிக்ஸன் படங்களில் மட்டுமே பார்த்து வந்த நமக்கு, அது ரொம்ப நாளுக்கு கனவாகவும் படமாகவும் மட்டுமே இருக்கப்போவதில்லை என்பது தெளிவாக புரிகிறது!