கார் பந்தயங்களில் முக்கியமான ஒன்றாக கருதபப்டும் E  சீரிஸ் சர்வதேச கார் பந்தயமானது கடந்த 2014ம் ஆண்டு முதல் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதற்கு லட்சக்கணக்கான ரசிகர்களும் உள்ளனர். இந்நிலையில், முதல்முறையாக மின்சார கார்களுக்கான பந்தயம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான,  ஒளிபரப்பு விநியோக உரிமையை, டாடா கம்யூனிகேஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


டாடா நிறுவனம் அறிக்கை:


இதுதொடர்பான அறிக்கையில், ”பார்முலா E இன் புதிய தொலைநிலை ஒளிபரப்புத் தயாரிப்பின் ஒரு பகுதியாக, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு உயர்-வரையறை, உயர்-தெளிவு மற்றும் அதிவேக நேரடி ஒளிபரப்பு உள்ளடக்கத்தை டாடா கம்யூனிகேஷன்ஸ் வழங்குவதற்கு  பல ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


டாடா நிறுவனம் உறுதி:


வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் 26 ஊடக தளங்களை பயன்படுத்தி, மில்லி விநாடிகளுக்குள் பார்முலா E பந்தயங்களில் இருந்து 160க்கும் மேற்பட்ட நேரடி வீடியோ மற்றும் ஆடியோ சிக்னல்களை வழங்க உள்ளது. டாடா கம்யூனிகேஷன்ஸ் வழங்கும் தடையற்ற டிராக் இணைப்பு மற்றும் ஆன்-ட்ராக் ஆக்ஷன் கைப்பற்றப்பட்டு,  நிகழ்நேரத்தில் தரவுகள் விநியோகிக்கப்படுவது உறுதிசெய்யப்படுவதால், ஒளிபரப்பின் தரம் ஒரு புதிய நிலைக்கு உயர்த்தப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.


இது எப்படி வேலை செய்கிறது


டாடா கம்யூனிகேஷன்ஸ் நிலையான தொலை உற்பத்திதீர்வாக, 85 க்கும் மேற்பட்ட கேமராக்கள் மூலம் எடுக்கபப்டும் வீடியோ மற்றும் ஆடியோ சேனல்களில் இருந்து நேரடி பந்தய நடவடிக்கையை ஒவ்வொரு பந்தயப் பாதையிலும் லண்டனில் உள்ள Formula E இன் மத்திய தொலைநிலை உற்பத்தி மையத்திற்கு அனுப்பும். மறுதொகுக்கப்பட்ட ஊட்டங்கள் உலகளாவிய உரிமைகள் வைத்திருக்கும் ஒளிபரப்பாளர்கள் மற்றும் டாடா கம்யூனிகேஷன்ஸ் உலகளாவிய விளிம்பை உட்கட்டமைப்பை மேம்படுத்தும் டிஜிட்டல் தளங்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.


இந்தியாவில் முதன்முறையாக..


இதனிடையே, முதல்முறையாக இந்தியாவில் இன்று ABB FIA ஃபார்முலா E கார் பந்தயம் நடைபெற்றது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 11 அணிகள் பங்கேற்றன. இதில், இரண்டு முறை ஃபார்முலா இ உலக சாம்பியனான ஜீன்-எரிக் வெர்க்னே முதலிடம் பிடித்து அசத்தினார். என்விஷன் ரேசிங்கின் நியூசிலாந்து ஓட்டுநர் நிக் கேசிடி இரண்டாவது இடத்தையும், என்விஷன் ரேசிங் நிறுவனத்திற்காக கார் ஓட்டிய மற்றொரு ஓட்டுனரான செபஸ்டியன் மூன்றாவது இடத்தை பிடித்தார்.


இந்திய அணி விவரங்கள்


இந்திய அணிகளான மஹிந்திரா ரேசிங் மற்றும் ஜாகுவார் டிசிஎஸ் ரேசிங் ஆகியவையும் போட்டியில் பங்கேற்றன.  மஹிந்திரா ரேசிங்கின் ஆலிவர் ரோலண்ட் ஆறாவது இடத்தைப் பிடித்தார். மஹிந்திரா நிறுவனத்தின் மற்றொரு ஓட்டுனரான லூகாஸ் டி கிராஸ்ஸி 14வது இடத்தைப் பிடித்தார். அதேநேரம்,  சாம் பேர்ட் மிட்ச் எவன்ஸை முந்திச் செல்லும் முயற்சியின் போது, அந்த காரின் மீது இடித்ததால் ஜாகுவார் அணியின் இரண்டு கார்களும் வெளியேற்றப்பட்டன.