புதிதாக ஸ்மார்ட்ஃபோன் வாங்கும் போது, அது நமக்குப் பல சிரமங்களை அளிக்கலாம். நம் பழைய ஸ்மார்ட்ஃபோனில் இருக்கும் டேட்டாவைப் புதிய ஸ்மார்ட்ஃபோனுக்கு சேர்ப்பது, அதனை செட் செய்வது, ஆப்களை இன்ஸ்டால் செய்வது முதலான பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் ஸ்மார்ட்ஃபோனை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் செலுத்தினாலோ, உங்கள் நண்பருக்கோ, உறவினருக்கோ அளிக்க விரும்பினாலோ, அதில் இருக்கும் தனிப்பட்ட டேட்டா நிச்சயம் அளிக்கப்பட வேண்டும். மேலும், சிலருக்குத் தங்களின் தற்போதைய ஸ்மார்ட்ஃபோனிலேயே  புதிய தொடக்கத்தை விரும்பி ரீசெட் செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். ஸ்மார்ட்ஃபோனை ரீசெட் செய்வதன் மூலம், ஸ்மார்ட்ஃபோனின் அனைத்து செட்டிங்ஸ்களும் அதன் இயல்புநிலைக்கு வந்தவிடுவதோடு, உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் உள்ள செயலிகள், படங்கள், மெசேஜ்கள் முதலான தனிப்பட்ட டேட்டாவும் முழுவதுமாக அழிந்துவிடும். 



உங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோனை ரீசெட் செய்வதற்கு சில நிமிடங்களே போதும்; மேலும், இதனை அனைத்து நவீன ஸ்மார்ட்ஃபோன் மாடல்களிலும் மேற்கொள்ள முடியும். கடந்த 5 ஆண்டுகளுக்குள் வெளியான ஸ்மார்ட்ஃபோன் மாடலைப் பயன்படுத்துவோருக்குத் தங்கள் ஸ்மார்ட்ஃபோனில் இருக்கும் டேட்டாவை அழிப்பது எளிமையான ஒன்று. உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் உள்ள டேட்டாவை முழுமையாக அழித்து ரீசெட் செய்வது எப்படி என்பதற்கான வழிமுறைகளை இங்கே கொடுத்துள்ளோம்... 


இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகள், சாம்சங், கூகுள் பிக்சல் முதலான ஸ்மார்ட்ஃபோன் மாடல்களின் அடிப்படையில் அளிக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் `செட்டிங்க்ஸ்’ பகுதியில் `reset' அல்லது `erase' என சர்ச் செய்வதன் மூலமாக இந்தப் பணியைத் தொடங்கலாம். மேலும், உங்கள் டேட்டாவின் பேக்கப் கிளவுட்டிலும், ஆஃப்லைனிலும் இருப்பதை உறுதிசெய்த பிறகு, உங்கள் ஸ்மார்ட்ஃபோனை ரீசெட் செய்யத் தொடங்குங்கள்.



ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்களை முழுமையாக ரீசெட் செய்வது எப்படி? (இது கூகுள் பிக்சல் மற்றும் பிற ஆண்ட்ராய்ட் மாடல்களுக்குப் பொருந்தும்)


1. `Settings’ பகுதிக்குச் சென்று, அதில் System என்ற பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். 
2. அதில் Reset பகுதியின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்ஷன்களைப் பார்வையிடவும். 
3. அடுத்ததாக அப்பகுதியின் கீழ்ப்பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் Erase all data (factory reset) என்பதை அழுத்தவும். 
4. அழிக்கப்படவுள்ள டேட்டாவின் விவரங்கள் கொடுக்கப்படும். அதனைப் பார்வையிட்ட பிறகு, `Erase all data’ என்பதை அழுத்தவும். 
5. உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் பாதுகாப்புக்காக நீங்கள் பயன்படுத்தும் பேட்டர்ன், பின் கோட், பாஸ் கோட் ஆகியவற்றை சரியாக செலுத்தி, உறுதி செய்து கொள்ளவும். 
6. மீண்டும் காட்டப்படும் எச்சரிக்கையைப் படித்து உறுதி செய்தவுடன், Erase all data என்ற ஆப்ஷனை மீண்டும் தேர்வு செய்தால் உங்கள் ஸ்மார்ட்ஃபோன் ரீசெட் செய்யப்படும்.