ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவையான ஜியோ ஃபைபர் சேவையை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இதில் நாடு முழுவதும் கிடைக்கும் பல்வேறு போஸ்ட்பெய்ட், ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியல் கிடைக்கிறது. மேலும், இந்த பிராட்பேண்ட் சேவையில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு வாடிக்கையாலர்களே 30Mbps முதல் 1Gbps வரையிலான இணைய வேகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதிவேக இணைய வசதி மட்டுமின்றி, ஜியோ நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவையைப் பயன்படுத்துவதன் மூலமாக அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ் முதலான ஓடிடி தளங்களைப் பயன்படுத்துவதற்கும் இலவச சப்ஸ்கிருப்ஷன் வழங்கப்படுகின்றது. இதனால் ஜியோ ஃபைபர் சேவை ஏர்டெல், ஏ.சி.டி ஃபைபர்நெட், பி.எஸ்.என்.எல் முதலான நிறுவனங்களின் இணைய சேவைகளுக்குப் போட்டியாகக் கருதப்படுகிறது. 


ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் சேவைக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை இங்கே கொடுத்துள்ளோம்.. இந்த வழிமுறைகளைப் படிப்படியாக பின்பற்றுவதன் மூலமாக ஜியோ பிராட்பேண்ட்  சேவையை ஆன்லைனிலேயே பதிவு செய்துகொள்ள முடியும். 



1. JioFiber சேவையின் முன்பதிவு இணைய பக்கத்திற்குச் செல்லவும்.
2. உங்கள் பெயரையும், மொபைல் எண்ணையும் அளிக்கவும்.. உங்களுக்கு OTP எண் தற்போது நீங்கள் அளித்த மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
3. 6 டிஜிட்களைக் கொண்ட OTP எண்ணை அதில் செலுத்தி, Verify OTP என்ற பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். 
4. ஜியோ ஃபைபர் இணைப்பைப் பெற விரும்பும் முகவரி விவரங்களை அளிக்கவும்.
5. Submit என்ற பட்டனை அழுத்தவும்.
6. உங்கள் விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், ஜியோ தரப்பில் இருந்து உங்கள் மொபைல் நம்பருக்கு உறுதி செய்து மெசேஜ் அனுப்பப்படும். பிராட்பேண்ட் இணைப்பு பெறுவதற்கான போதிய ஆவணங்களை வைத்திருப்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.


மத்திய தொலைதொடர்பு அமைச்சகத்தின் விதிமுறைகளின் படி, பிராட்பேண்ட் சேவை பெறுவதற்காக ஆதார் அட்டை அல்லது முகவரிக்கான ஆதாரமாக அடையாள அட்டை முதலானவற்றை வழங்க வேண்டும். 


சமீபத்தில் ட்ராய் அமைப்பின் அறிக்கை ஒன்றின்படி, நாடு முழுவதும் சுமார் 43.4 லட்சம் பேருடன் உலகிலேயே அதிகம் பேர் பயன்படுத்தும் பிராட்பேண்ட் சேவையாக மாறியுள்ளது ஜியோ ஃபைபர். இதன் அடுத்த இடத்தில் பி.எஸ்.என்.எல் இருக்கிறது. 


கடந்த ஆண்டு, ஜியோ நிறுவனம் சார்பில் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் ப்ளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. போஸ்ட்பெய்ட் பயனாளர்களுக்குக் காலாண்டுத் திட்டங்கள் சுமார் 2097 ரூபாயில் இருந்து தொடங்குகின்றன. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண