பிரபல சாம்சங் நிறுவனம் 6000mAh பேட்டரி திறன்கொண்ட புதிய சாம்சங் எம் 32 என்ற மாடலை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகின்றது. இந்த கொரோனா தொற்று சூழலில் பல ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய புதிய மற்றும் அப்கிரேட் செய்யப்பட்ட ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. பல நிறுவனங்கள் தங்களுடைய பட்ஜெட் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. 


சாம்சங் எம் 32


ஏற்கனவே வெளியான சாம்சங் எம் 31 மடலின் அப்கிரேட் வெர்சன் தான் இந்த சாம்சங் எம் 32. இன்னும் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாத இந்த போன் 6000mAh பேட்டரி திறன்கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் போன் 20,000 ருபாய் விலையில் வெளியாக வாய்ப்புகள் உள்ளது. முன்புறம் கிளாஸ், பிளாஸ்டிக் பிரேம் மற்றும் பிளாஸ்டிக் பின்புறம் கொண்டு சாம்சங் எம் 32 உருவாக்கப்பட்டுள்ளது. சூப்பர் அமோல்ட் டிஸ்பிலே கொண்ட இந்த போன் 6.4 இன்ச் திரையளவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.  


Apple ios 15 : வெளியானது ஐஓஎஸ்15 அப்டேட்! என்னென்ன வசதிகள் இருக்கு ?




4 ஜி.பி. RAM மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜி.பி. RAM மற்றும் 128 ஜி.பி ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு வகை மடல்களாக வெளியாகும் இந்த ஸ்மார்ட் போனின் முன்புற மெயின் கேமரா 48 மெகா பிக்சல் கொண்டுள்ளது. மேலும் மூன்று கேமெராக்கள் பின்புறம் பொருத்தப்பட்டுள்ளது. 6000mAh பேட்டரி திறன்கொண்ட இந்த போனில் 20 மெகா பிக்சல் செல்ஃபீ கேமரா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




அண்மையில் ஒன்பிள்ஸ் ஸ்மார்ட் போன் நிறுவனம் தனது அதிரடியான Oneplus Nord CE 5G மடலை இந்த மாதம் வெளியிடவுள்ளதாக அறிவித்தது. சீன நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு முதல் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Oneplus Nord CE 5G என்ற இந்த மாடல் அந்த நிறுவனத்தால் இம்மாதம் அறிவிக்கப்பட்ட ஒரு ஸ்மார்ட் போன். இந்த மாடலில் டூயல் சிம் பொருத்தும் வசதி உள்ளது (நானோ). அமோல்ட் கொண்ட 6.43இன்ச் டிஸ்பிலே பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் Android 11, ஆக்சிஜென் 11 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டு Qualcomm SM7225 Snapdragon 750G 5G சிப்செட்டுடன் செயல்படுகின்றது. 6 ஜிபி RAM 64 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி RAM 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு மடல்களில் வெளியாகவுள்ளது. 64 எம்.பி மெயின் கேமரா மற்றும் இரண்டு கேமெராக்களுடன் 16எம்.பி செல்ஃபீ கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் போனின் விலை 22999 இருக்கலாம் என்ற யூகங்களும் இணையத்தில் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.