பட்ஜெட் போன்களுக்கு பிரபலமான ரெட்மி தன்னுடைய அடுத்த மாடலை சந்தையில் களமிறக்கவுள்ளது. Redmi Note 11T 5G India மாடல் வரும் 30 தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளது.  சீனாவில் கடந்த மாதம் இந்த மாடல் வெளியான நிலையில் தற்போது இந்தியாவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான தகவல்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.


எப்போது?
ரெட்மி இந்தியா ட்வீட் செய்துள்ள தகவலின்படி, Redmi Note 11T 5G மாடல்  இந்தியாவில் வெளியாகவுள்ளது. சோஷியல் மீடியா மூலம் நேரலையில் இந்த அறிமுக விழா நடைபெறவுள்ளது. ரெட்மி நோட்டின் முந்தைய மாடல்கள் ஏற்கெனவே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த மாடலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமென தெரிகிறது.





என்ன இருக்க வாய்ப்பு? 
வெளியாகப்போகும் Redmi Note 11T 5G மாடலில் கீழ்கண்ட சிறப்பம்சங்கள் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதிகாரப்பூர்வ சிறப்பம்சங்கள் அறிமுகமான பிறகே தெரியவரும். அதன்படி,


ஸ்மார்ட்போன்களின் சராசரி அளவான 6.60 இன்ச் டிஸ்பிளே அளவே இந்த மாடலுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரை 50 மெகாபிக்ஸல் மெயின் கேமராக உள்ளது. செல்பி கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்ஸல் கொடுக்கப்பட்டுள்ளது.  பேட்டரி 5000 mAh ஆக உள்ளது. 33W சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது.






இதனால் அதிவேக சார்ஜிங் வாய்ப்புண்டு. இதனால் நீண்ட நேரம் பேட்டரி சார்ஜ் நிற்குமென தெரிகிறது. ஆண்ட்ராய்ட் os மற்றும் 1080 ரெசோலேஷனாக இந்த மாடல் உள்ளது.  6GB RAM + 64GB,  6GB + 128GB, 8GB + 128GB ஆகிய வேரியண்டுகளில் இந்த மாடல் சந்தையில் கிடைப்பெறவுள்ளது. நீலம், கருப்பு, வெள்ளை ஆகிய வண்ணங்களில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.