இந்தியாவில் புதிய ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்ஃபோன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி அறிமுகம் ஆகிறது.


ரியல்மி ஜிடி 2 ப்ரோ பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் இருக்கும், என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.


ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் AMOLED 10-bit ‘Super Reality' டிஸ்பிளேவுடன் வெளிவரும்.  1,440x3,216 பிக்சல், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.  


ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50 எம்.பி Sony IMX766 சென்சார் +50எம்.பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டது.  இந்த ஸ்மாட்ஃபோன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி  ஆகிய இண்டர்னல் மெமரி வசதியைக் கொண்டுள்ளது.