தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு அப்டேட் ஆகிக்கொண்டேதான் இருக்கிறது. நாமும் அதற்கேற்ப நம்மை அப்டேட் செய்து கொள்கிறோம். இதில் டிஜிட்டல் டிவைட் என்பது ரொம்ப நாட்களாக நீடிக்கிறது. ஆனால் அதற்கேற்ற வகையில் அப்டேட்களை கொடுக்க முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

Continues below advertisement

பெரும்பாலானவர்கள் தற்போது டிஜிட்டல் முறையிலேயே பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். அதுவும், கொரோனாவிற்கு பிறகு மக்கள் டிஜிட்டல் பேமெண்ட்ஸின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியிருக்கையில், டிஜிட்டல் முறையில் பணம் அனுப்ப ஸ்மாட்ஃபோன் மட்டுமே அவசியம் என்றாக இருந்தது. ஆனால் அனைவரும் டிஜிட்டல் வழியில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

 அதன்படி, இனி சாதாரண பட்டன் போன்களுக்கான புதிய பிரத்யேக யுபிஐ வசதியை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய யுபிஐ சேவைக்கு '123 பே' எனப் பெயரிடப்பட்டிருகிறது.

Continues below advertisement

பாதுகாப்பான ஆன்லைன் பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்காக புதிய பிரத்யேக யுபிஐ வசதியை அறிமுகம் செய்யதுள்ளதாகவும், இந்த வசதியின் மூலம் இந்தியாவில் 40 கோடி பேர் பயனடைவார்கள் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும், இந்த புதிய சேவையின் தகவல்களை பெற பிரத்யேக திட்டமும் தொடங்கப்படும். குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு இந்த யுபிஐ சேவைகள் பெரிதும் பயனளிக்கும். அவர்களுக்கும் இது பற்றி கொண்டு சேர்க்க வேண்டும்  எனவும் அவர் கூறியுள்ளார். இதில் கூடுதல் சிறப்பு என்னெவென்றால்,  புதிய முறையில் இணைய வசதி இல்லாமலேயே பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

தற்போது வரை, யுபிஐயின் பன்முக அம்சங்கள் பெரும்பாலும் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே கிடைக்கின்றன. இது பொருளாதார ரீதியில் சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ளவர்களை, குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பெரும்பாலும் இந்த சேவையை அணுகுவதைத் தவிர்க்கிறது.

இதுவரை  யுபிஐ   மூலம் செய்யப்பட்டுள்ள பரிவர்த்தனை 2022 ஆம் நிதியாண்டில் ₹76 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இது கடந்த 2021 ஆம் நிதியாண்டில் ₹41 லட்சம் கோடியாக இருந்தது. மொத்த மதிப்பு ₹100 லட்சம் கோடியைத் தொடும் நாள் வெகுதொலைவில் இல்லை”என்றும் தெரிவித்தார்.

 

இந்த அனைத்து சேவைகளையும் நான்கு மாற்று வழிகளில் அணுகலாம்:

  1. ஒரு IVR (interactive voice response) வசதி மூலம் அழைப்பை மேற்கொண்டு பயனர்கள் பரிவர்த்தனை செய்யலாம்.
  2. ஒரு மொபைல் ஃபோன் செயலி- பேசிக் மாடல் என்றாலும் சில கூடுதல் வசதிகளைக் கொண்டிருக்கும் போன்களில் இதைப் பயன்படுத்தலாம். இதில் ஸ்கேன் செய்து பணம் செலுத்துவதற்கான அம்சத்தைத் தவிர, ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து ஆப்சன்ஸ்களும் கிடைக்கும்.
  3. மிஸ்டு கால் அடிப்படையிலான அணுகுமுறை- இதில் பயனர்கள் பரிவர்த்தனைகளைத் தொடங்க மிஸ்ட் கால் கொடுக்கலாம்.
  4. அருகாமையில் உள்ள ஒலி அடிப்படையிலான பேமன்ஸ்களை சாதாரண ஃபோன்களில் பெறலாம். (Proximity sound-based payments)

டிஜிட்டல் பணம் செலுத்துவதற்கான 24x7 ஹெல்ப்லைனை வசதியும் இருக்கிறது. 'டிஜிசாதி' ('Digisaathi') எனப் பெயரிடப்பட்ட ஹெல்ப்லைன் - இணையதளம் மற்றும் சாட்பாட் மூலம் டிஜிட்டல் பேமெண்ட்கள் குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.