"வீடியோ கேம்னா அது ஒரு ஃபீல், பப்ஜினு சொன்னா அது ஒரு எமோஷன்" என சொல்லும் அளவிற்கு உலகம் முழுக்க " பப்ஜி" விளையாட்டுக்கு ரசிகர்கள் ஏராளம்.குறிப்பா இந்தியாவுல இந்த விளையாட்ட கொண்டாடி தீர்த்தாங்க. பட்டித்தொட்டி எங்கும் பப்ஜியின் நீட்சியை பார்க்க முடிந்தது. ஆனால் சீனா, செயலிகள் மூலமாக இந்தியாவை உளவு பார்ப்பதாக கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட சீனாவுடன் தொடர்புடைய செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த அறிவிப்பு பப்ஜி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தாலும் , அதன் பிறகு CALL OF DUTY, FAUG-G என நிறைய மொபைல் கேம் சந்தைப்படுத்தப்பட்டது. பல கேமிங் நிறுவனங்கள் இந்தியாவை குறிவைத்தே பல மொபைல் கேமினை களமிறக்கினார்கள். ஆனால் அவை அனைத்தும் பப்ஜி ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்தவே இல்லை, பப்ஜியை விட சிறந்த விளையாட்டை தங்கள் நிறுவனம் கொடுக்க வேண்டும் என்ற போட்டா போட்டி கேமிங் நிறுவனங்கள் மத்தியில் இன்றளவும் உள்ளது.
PUBG Relaunch | இந்தியாவில் மீண்டும் பப்ஜியா? யோவ் மிலிட்டரி நீயா மொமெண்ட்..
ABP NADU | 05 May 2021 10:40 PM (IST)
பப்ஜி விளையாட்டின் , இந்திய பதிப்பின் பெயரை "BATTLE GROUND INDIA" என அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது .இது பப்ஜி வருகையை உறுதிப்படுத்துவதோடு அது விரைவில் பயன்பாட்டிற்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
பப்ஜி
Published at: 05 May 2021 10:29 PM (IST)