இன்று மாலை 4.08 மணி அளவில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்த , இஸ்ரோவின் PSLV-C59 ராக்கெட்டானது, நாளை மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 


PSLV-C59:


PSLV-C59 ராக்கெட்டானது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்திற்கு சொந்தமான  Proba-3 விண்கலத்தை  விண்ணில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுமார்  550 கிலோ எடையுள்ள இரண்டு விண்கலங்களை , விண்வெளிக்குச் சுமந்து செல்லும் பணியை தான்,  பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் மேற்கொள்ள உள்ளது. அதாவது , இஸ்ரோவின் வணிக ரீதியான பயணம் என்றே சொல்லலாம்.


 






புரோபா-3  விண்கலம்:


ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் புரோபா-3  விண்கலமானது, இது 2 விண்கலங்களைக் கொண்டுள்ளது. கரோனாகிராஃப் ஸ்பேஸ் கிராப்ட்  மற்றும் ஓகல்டர் ஸ்பேஸ் கிராஃப்ட்  ஆகிய இரண்டு விண்கலங்களும் ஒன்றாக அடுக்கப்பட்ட கட்டமைப்பில் ஏவப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


புரோபா-3 விண்கலத்தின் முக்கிய பணியானது, சூரியனின் வளிமண்டலம் குறித்து ஆராய்ச்சி செய்வதாகவும். இதன் மூலம் சூரிய வளிமண்டலத்தில் மிக அதிக வெப்பம் ஏன் இருக்கிறது என்பது குறித்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என தகவல் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சூரிய புயல்கள் குறித்தும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். இந்த திட்டமானது ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மிக நீண்ட கால திட்டமாகும். 


ராக்கெட் பயணிக்கும் வரைபடம்:




நாளை ஒத்திவைப்பு:


இந்த நிலையில், ஐரோப்பிய விண்வெளி மையத்தின் விண்கலத்தை, விண்ணில் நிலைநிறுத்தும் பணியை , இஸ்ரோ மேற்கொண்டுள்ளது. 


இந்நிலையில் ராக்கெட் ஏவுதளமானது, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவுதலானது, இன்று மாலை 4.08 திட்டமிடப்பட்டது.


ஆனால், கடைசி நேரத்தில் நாளை மாலை 4. 12க்கு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுதொடர்பாக இஸ்ரோ தெரிவித்துள்ளதாவது , “ PROBA-3 விண்கலத்தில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக PSLV-C59 ராக்கெட் ஏவுதலானது, நாளை மாலை  4. 12 மணிநேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.