பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகிய செயலிகள் செயல்படாமல் இருந்த போது, உலகின் பிரபலமான அடல்ட் வீடியோ இணையதளமான `பார்ன்ஹப்’ தளத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை சுமார் 10.5 சதவிகிதமாக உயர்ந்தது. 


பேஸ்புக் நிறுவனத்தின் செயலிகள் செயல்படாமல் போனதையடுத்து, பார்ன் தளங்களுக்கு அதிக பார்வையாளர்கள் கூடியிருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. ஒவ்வொரு மணி நேரமும் பேஸ்புக் நிறுவனம் இழப்பைச் சந்தித்துக் கொண்டிருந்த போது, பார்ன்ஹப் தளம் சுமார் 5 லட்சம் புதிய பார்வையாளர்களைச் சம்பாதித்துக் கொண்டது. 


கடந்த 2008ஆம் ஆண்டு, பேஸ்புக் நிறுவனம் சுமார் ஒரு நாள் முழுவதும் செயல்படாமல் இருந்ததற்குப் பிறகு, கடந்த அக்டோபர் 4 அன்று, இரண்டாவது முறையாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அளவில் செயல்படாமல் போனது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சாப் ஆகிய செயலிகளின் முழுக் கட்டுப்பாடும் பேஸ்புக் நிறுவனத்தின் ஒரே தலைமையிடத்தில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டதால் இவ்வாறு நடந்துள்ளதாக பேஸ்புக் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான அசம்பாவிதத்தின் போது, பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த சேவைகளும் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. இந்தப் பிரச்னை குறித்து ஆராய்வதற்காக நிறுவனத்தின் கட்டிடத்திற்குள் நுழைய முயன்ற பொறியியலாளர்களால் கூட, கட்டிடத்திற்குள் நுழைய முடியாமல் போனது.



பேஸ்புக் நிறுவனம் இவ்வாறு வரலாறு காணாத இழப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கையில், பார்ன்ஹப் தளம் எந்த விளம்பரமும் செய்யாமல் லாபம் ஈட்டியுள்ளது. இந்தியாவில் அடல்ட் வீடியோ தளங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அடல்ட் வீடியோக்களைப் பார்ப்பது குறித்து எந்தச் சட்ட விதிமுறையும் இல்லை. பார்ன்ஹப் தளத்தில் சுமார் 5 லட்சம் பேர் அதிகமாக நுழைந்தது குறித்து, அத்தளத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.






பேஸ்புக் நிறுவனம் கடந்த வாரத்தின் போது, பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகச் செயற்பாட்டாளர் ஒருவர் அமெரிக்காவின் சட்டத்துறையை நாடிய போது பேசுபொருளானது. பேஸ்புக் தற்போது செயல்படுவது போல் தொடர்ந்து செயல்பட்டால், உலகம் முழுவதும் ஜனநாயகம் பாதிக்கப்படும் எனப் புகார் அளித்த செயற்பாட்டாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியா போன்ற நாடுகளில் ஆர்.எஸ்.எஸ் முதலான அமைப்புகளின் வெறுப்பு பிரசாரங்களைக் கட்டுப்படுத்துவதில் பேஸ்புக் நிறுவனம் தவறிவிட்டதாகவும் இந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது. 



சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் இதழின் கட்டுரை ஒன்றில் பார்ன்ஹப் தளம் குறித்த சர்ச்சைகள் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. பார்ன்ஹப் தளத்தில் விருப்பமின்றி உடலுறவு கொண்டோரின் வீடியோக்கள் பதிவிட்டிருப்பதாக அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து பார்ன்ஹப் தளத்தில் வீடியோ பதிவேற்றுவோர் தங்கள் அடையாளத்தை உறுதிசெய்யுமாறு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 


புதிய தொழில்நுட்பங்கள் மனித மனத்தின் இயல்பை முழுவதுமாக பாதிக்காமல், பேஸ்புக் சேவைகள் நின்றவுடன் பெரும்பாலானோர் பார்ஹப் தளத்திற்கு மாறியதை இணைய உலகம் ஆச்சர்யமாகப் பார்த்து வருகிறது.