'Paytm Payments Bank’ புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ’Paytm UPI LITE’மூலம் இதுவரை 43 லட்சத்திற்கும் (4.3 மில்லியன் பயனர்கள்) அதிகமாக பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.'Paytm Super App’ மூலம் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகளை பதிவு செய்துள்ளது.


தினசரி சிங்கிள் டேப்பில் ரூ.200 பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளுப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரங்களில் அது ப்ராசஸ் செய்ய நேரம் எடுக்கும். ஆனால், பேடிஎம் மூலம் துரிதமாக பணம் பரிமாற்றம் மேற்கொள்ள பல புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதோடு, யு.பி.ஐ. லைட் மூலம் மேற்கொள்ளப்படும் பணம் பரிமாற்றங்கள் குறித்து வங்கி கணக்கு புத்தகத்தில் (Bank Passbook) முழு விவரங்களையும் காண முடியும்.


யுபிஐ லைட் :


முதன் முதலாக, யுபிஐ பின் (upi pin) இல்லாமல் பணப் பரிவர்த்தனை செய்வது குறித்து  Paytm  புதிய வசதியை அறிமுகம் செய்தது. அது என்னவென்று பார்த்தால் பொதுவாக UPI மூலம் பணம் செலுத்த வேண்டும் என்றால் பணப்பரிவரித்தனை மேற்கொள்ளும் முன் பயணர் அதற்கான 4 அல்லது 6 இலக்க எண்களை உள்ளிட வேண்டும்.


அவசர தேவைக்காக பொதுவெளியில் பணம் செலுத்தும்போது சிலர் PIN நம்பரை கவனிக்கவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற சிரமங்களை தவிர்க்கவும், விரைவாக பயனர்கள் பணத்தை பரிவர்த்தனை செய்ய ஏதுவாக 'Paytm lite' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் சிறு கடைகளில் ரூ.200 வரையில் பின் நம்பர் பதிவிடாமல் விரைவாக பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.


 Paytm UPI வாடிக்கையாளர்கள் மட்டுமே யுபிஐ லைட் கணக்குகளை அமைக்க முடியும். முதலில் பேடிஎம் வைத்திருக்கும் பயணர்கள் உங்கள் மொபைலில் யுபிஐ லைட்டுக்கான ஆதரவை அனுமதிக்க வேண்டும். அதன்பின், யுபிஐ லைட் வாலாட்டில் உள்ள பணத்தை பின் நம்பர் இல்லாமல் உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றலாம்.  இந்த யுபிஐ லைட் மூலம் ஒரே நாளில் ரூ.4,000 வரை பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் பேடிஎம் செயலிக்கு பரிவர்த்தனை அதிகபட்ச வரம்பு ரூ.1 லட்சம் வரை உள்ளது. இது, வங்கியைப் பொறுத்து மாறுபடலாம். இதில் ஒரு நாளைக்கு 20 பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு ஏற்பவும் மாறுபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஐ.பி.எல். திருவிழா:


ஐ.பி.எல். திருவிழாவினை முன்னிட்டு பேடிஎம் மூலம் டிரீம்11, எம்.பி..எல்., My11Circle, First Games, Winzo,மற்றும் Myteam11 ஆகிய ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பேடிஎம் லைட் பயன்படுத்தி ரூ.300 கேஷ்பேக் பெறலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும், ஐ.பி.எல். கிரிக்கெட்டிற்காக பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்தியாவில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, யு.பி.ஐ. மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதாக மத்திய அரசும் தெரிவித்துள்ளது. ஆன்லைன் பொருட்களை வாங்குதல், பண பரிமாற்றம் மேற்கொள்ளுதல், சில்லறை வணிக கடைகளில் கூட பண பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. ஏடிஎம் வாசலில் கூட மக்கள் நிற்பது, முன்பை விட குறைந்து விட்டது. தற்போதெல்லாம் பேடிஎம், கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பண பரிவர்த்தனை செயலிகளை கிராமங்கள் உட்பட பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.