ஓடிடி நிறுவனங்களில் பிரபல நிறுவனமான நெட்ப்ளிக்ஸ், சந்தா செலுத்தி அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் வேறொருவருடன் அக்கவுண்டை பகிர்ந்து கொள்ளும்போது தனிச்சந்தா வசூலிக்க திட்டமிட்டிருகிறது. இதனால், நெட்ப்ளிக்ஸ் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில், திரையரங்குகள் மூடப்பட்டதால் ஓடிடி தளங்கள் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றன. திரைப்பட தயாரிப்பாளர்களும் தாங்கள் தயாரித்த திரைப்படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட்டனர். கொரோனா பரவல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது.


இந்நிலையில்,  கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான நெட்ப்ளிக்ஸ் அப்போது முதல் இதுவரை கட்டணக் குறைப்பே செய்ததில்லை. இந்நிலையில் அண்மையில் பல்வேறு ஓடிடி நிறுவனங்களும் கட்டணக் குறைப்பில் ஈடுபட்டுவருவதால் நெட்ஃப்ளிக்ஸும் கட்டணக் குறைப்பை செய்தது.






இதற்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், சந்தா செலுத்தி அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் வேறொருவருடன் அக்கவுண்டை பகிர்ந்து கொள்ளும்போது தனிச்சந்தா வசூலிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த முடிவு முதலில் பரிசோதிக்கப்படும் என நெட்ப்ளிக்ஸ் தெரிவித்திருக்கிறது. முதலில் கோஸ்டா ரிக்கா, சில், பெரு ஆகிய மூன்று நாடுகளில் பரிசோதனை செய்ய இருக்கிறது. இதனால், இந்த நடைமுறை இந்தியாவில் அமல்படுத்தப்பட சில காலம் எடுக்கும் என தெரிகிறது.


நெட்பிளிக்ஸ் தளத்தில் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் உள்ளிடவற்றை மொபைல், டேபுளட், டிவி அல்லது லேப்டாப்பில் பார்ப்பதற்கான அடிப்படை சந்தா விலை மாதத்திற்கு முன்பு 499 ரூபாயாக இருந்தது. அந்த சந்தாவின் விலை தற்போது 199 ரூபாயாக குறைக்கப்பட்டது.


அதே போல நிகழ்ச்சிகளை ஹெச்.டி குவாலிட்டியில் ஒரே நேரத்தில் இரண்டு திரையில் பார்ப்பதற்கான மாத சந்தா விலை முன்பு 649 ரூபாயாக இருந்தது. அதன் விலை 499 ரூபாயாக குறைக்கப்பட்டது. இவற்றுடன் அல்ட்ரா ஹெச்.டி குவாலிட்டியில், ஒரே நேரத்தில் நான்கு திரைகளில் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கான மாத சந்தா 799 ரூபாயிலிருந்து 649 ரூபாயாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண