ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சமீப காலமாக tablets உற்பத்தி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த வகையில் பட்ஜெட் ஃபிரண்ட்லி மொபைல் நிறுவனமான OPPO தற்போது புதிய டேப்லர் தயாரிக்கு முயற்சிகளில் இறங்கியுள்ளது. இது குறித்த எந்தவொரு அறிவிப்பையும்  OPPO வெளியிடவில்லை என்றாலும் , இணையத்த கசிந்த தகவலின் அடிப்படையில் இதற்கு  OPPO Pad  என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.மேலும் இது குறித்தான சில தகவல்கள் முன்கூட்டியே வெளியான நிலையில் தற்போது சைனாவின் ஒரு கடையில் அதன் prototype மாடல் வெளியாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.







வெளியான தகவலின் அடிப்படையில் oppo tablet இன் திரை 11 இன்ச் அளவில் உள்ளது.  LCD டிஸ்ப்ளே அல்லது  AMOLED டிஸ்பிளேயுடன் உருவாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் 120Hz refresh rate மற்றும்  120Hz திறனுடைய டிஸ்பிளே வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.  அதே போல punch hole உடன் கூடிய முன்பக்க கேமரா வசதியை கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.அதே போல  Dock Bar and Desktop Widgets என்ற வசதிகள் மூலமாக டேப்லெட்டில் உள்ள வசதிகளின் அனுகளை எளிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.பேட்டரியை பொருத்த வரையில் 8,080 mAh திறனுடைய பேட்டரி வசதிகளை கொண்டுள்ளது.






 Snapdragon 870 புராஸசர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  6 GB of RAM  மற்றும் 256 GB  வரையிலான  internal Storage வசதிகளுடன் புதிய oppo pad உருவாக்கப்பட்டிருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றனர். வரவிருக்கும் இந்த புதிய வOppo Pad டேப்லெட் ஆனது  Xiaomi நிறுவனத்தின்  Mi Pad 5 மற்றும் Mi Pad 5 Pro உடன் நேரடியாக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.   oppo pad   டேப்லெட்டானது oppo ஸ்மார்ட்போன்கள், oppo ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் பிற oppo ஸ்மார்ட் சாதனங்களுடன் இணைக்கும் வகையிலான வசதிகளை கொண்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் மாதம் இது குறித்த அறிவிப்பை oppo  நிறுவனம் சர்ஃப்ரைஸாக வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் oppo pad டேப்லட்டை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.