Netflix Subscription: ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர்கள் கடந்த ஆறு மாதங்களாக போராட்டம்  நடத்தி வரும் நிலைலயில், நெட்ஃபிளிக்ஸ் பயனாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


நெட்ஃபிளிக்ஸ்:


கொரோனா காலத்திற்கு பிறகு இந்தியாவில் ஓடிடி தளங்கள் அசுற வளர்ச்சி அடைந்தன. அதில், அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற பயன்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்தவகையில், உலக அளவில் மிகவும் பிரபலமான ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.  இந்த செயலியில் வெளியாகும் வெப் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.  ஒரு மாதம், மூன்று மாதம், ஆறு மாதம், ஒரு வருடம் என சந்தா செலுத்தி கோடிக்கணக்கான பயனர்கள் படங்கள், சீரிஸ்களை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நெட்ஃபிளிக்ஸ் சந்தா தொகையை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


கட்டணம் உயர்வா?


ஹாலிவுட் நடிகர்களின் வேலை நிறுத்தம் முடிவடைந்த பின்னர், நெட்ஃபிளிக்ஸ் அதன் சந்தா விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி நெட்ஃபிளிக்ஸ் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. ஆனால், எவ்வளவு விலையை உயர்த்து என்பது பற்றி தகவல் வெளியாகிவில்லை. மேலும், புதிய விலை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது பற்றிய தகவலும் வெளியாகவில்லை. இந்த விலை உயர்வு கனடா மற்றும் அமெரிக்காவிற்கு பொருந்தும் என்று தெரிகிறது. மேலும், இந்த விலை உயர்வு இந்தியாவுக்கு வருமா என்பது தெரியவில்லை.  நெட்ஃபிளிக்ஸ் கட்டண தொகை 25 சதவீதம் வரை உயரும் என்று கூறப்படுகிறது.


என்ன காரணம்?


ஹாலிவுட் திரைப்பட திரைக்கதை  எழுத்தாளர்கள் சங்கம் கடந்த ஆறு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எழுத்தாளர்களை ஒரு குறிபிட்ட காலத்திற்கு உத்தரவாதமான  பணியில் அமர்த்த வேண்டும், தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள், ஓ.டி.டி யில் தங்கள் பனியாற்றிய நிகழ்ச்சிகள் வெற்றிபெற்றால் அதில் தங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு ஊதியம் அளிக்கப்பட வேண்டும்,  அதே நேரத்தில் திரைக்கதை எழுத்துப் பணிகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப் படக்கூடாது ஆகிய கோரிக்கைகளை ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் ஓ.டி.டி நிறுவனங்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இரு தரப்பினருக்கு இடையிலும் பேச்சுவார்த்தை பலனளிக்காத கடந்த மே 2 ஆம் தேதி எழுத்தாளர்கள் வேலை  நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.


11,500  எழுத்தாளர்களை உள்ளடக்கிய இந்த சங்கத்தில் போராட்டம் ஆறு மாதங்களாக நடந்து வருகின்றது. இதன் காரணத்தினால் அமேசான் , நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட பல பிரபலமான வெப் சிரீஸ் மற்றும் படங்களின் வேலைகள் நிலுவையில் இருந்து வருகின்றன. இதோடு இல்லாமல், ஒடிடி நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தும் வரும் நிலையில், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் சந்தா தொகையை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.