ஹெலிகாப்டர் ஷாட்டை பிரபலப்படுத்திய இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் மகேந்திர சிங் தோனி, குவாட்காப்டர் நுகர்வோர் கேமரா ஆளில்லா விமானத்தை ‘ட்ரோனி’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளார். மேம்பட்ட அம்சங்களைக் கொண்ட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கேமரா ட்ரோன் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. மகேந்திர சிங் தோனி கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் பிராண்ட் தூதராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


அறிமுகப்படுத்தப்பட்ட ட்ரோன் மூலம் விவசாய பூச்சிக்கொல்லி தெளித்தல், உயரமாக உள்ள சோலார் பேனல் சுத்தம் செய்தல், தொழிற்சாலை குழாய் ஆய்வுகள், கணக்கெடுப்பு, ஏதேனும் முக்கிய அறிவிப்பு மற்றும் விநியோக சேவைகளுக்கு தீர்வுகளை வழங்கலாம் என கூறப்படுகிறது. இந்த குறிப்பிட்ட ட்ரோன் ‘ட்ரோனி’ மூலம் நுகர்வோர் ட்ரோன் சந்தையில் இறங்கியுள்ளது.






நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் விவசாயத் துறையை இலக்காக கொண்ட புதிக ‘கிசான் ட்ரோன் அறிமுகப்படுத்தப்பட்டது. பேட்டரியில் இயங்கும் இந்த வகை ஆளில்லா ட்ரோன் ஒரு நாளைக்கு 30 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


ட்ரோனை அறிமுகப்படுத்திய பின் பேசிய தோனி, கொரோனா ஊரடங்கின்போது விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து விவசாயிகளுக்கான ட்ரோன்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியத்துவம் என்பது குறித்து வலியுறுத்தினார். 










இதுகுறித்து ட்ரோனி நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் தெரிவிக்கையில், “ இந்த தயாரிப்பு 2022ம் ஆண்டு இறுதிக்குள் சந்தையில் அறிமுகம் செய்யப்படும். எங்கள் ட்ரோனி ட்ரோன் உள்நாட்டு மற்றும் பல்வேறு கண்காணிப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம். இதில் உள்ள தொழில்நுட்பம் மிகவும் திறமையானது, தடையற்றது. உயர் தரமானது. மேக் இன் இந்தியா ட்ரோன்கள் சிறந்த தரம், பாதுகாப்பானது. இந்த ட்ரோனி ட்ரோன் மூலம் ட்ரோன் அடிப்படையிலான தீர்வுகளுக்கான மையமாக இந்தியாவை உலக வரைபடத்தில் வைப்போம் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.