மோட்டோவின் புதிய மாடல் G42 ஸ்மார்ட்ஃபோனின் விற்பனை ஃபிலிப்கார்ட்டில் நாளை முதல் தொடங்குகிறது.
பட்ஜெட் விலையில் ஸ்மாட்ஃபோன்கள்தான் சந்தையில் மிகவும் பிரபலம். சந்தையில் நிலவும் போட்டிகளுக்கு ஏற்ப ஸ்மாட்ஃபோன் நிறுவனங்கள் அப்டேட்களுடன் புதிய மாடல்களை அனைவரும் வாங்கக்கூடிய விலையில் வழங்கி வருகிறது.
மோட்டோ ஜி 42 மொபைல்போன்களின் சிறப்பு என்னவென்று பார்ப்போம்.
Moto G42 4 ஜி மொபைல் ஃபோன். ஆண்ட்ராய்ட் 12 இயங்குதளத்துடன் 6.4 AMOLED மற்றும் முழு HD+ (2400 x 1080 பிக்சல்கள்) தீர்மானம் கொண்ட 6.4-இன்ச் OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் 20:9 என்னும் புதுப்பித்தல் விகிதத்தைக் கொண்டுள்ளது. f/1.8 துளை கொண்ட 50MP பிரதான லென்ஸுடன் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் அடங்கும் . பின்புற கேமரா வினாடிக்கு 30 பிரேம்களில் 1080 வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டது. முன்பக்கத்தில், 16MP செல்ஃபி ஸ்னாப்பர் உள்ளது.இது ஒரு பஞ்ச்-ஹோல் பேனல்.
Qualcomm Snapdragon 680 SoC புராஸசர் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் 4GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது. இதில் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது . மேலும் 18W வேகமான சார்ஜிங் வசதி இருக்கிறது. போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் உள்ளது.கூடுதல் பாதுகாப்பிற்காக ஃபிங்கர் பிர்ண்ட் ஸ்கேனர் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.இது புளூடூத் 5.0, டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் ஜிபிஎஸ் போன்ற அடிப்படை வசதிகளை கொண்டுள்ளது. இது Metallic Rose மற்றும் Atlantic Green ஆகிய இரண்டு வேரியண்ட் நிறங்களில் கிடைக்கும்.
விலை:
மோட்டோ ஜி42 ஸ்மார்ட்ஃபோன் ரூ.12,999 க்கு ஃபிலிப்கார்ட்டில் கிடைக்கிறது. எஸ்.பி.ஐ. வங்கிக் கணக்கு மற்றும் ஜியோ பயனர்களுக்கு ஆஃபர்களும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்