தகவல் தொடர்பு இன்று ஸ்மார்ட்போன், இணையம், சமூக வலைதளம் என பல்வேறு தொழில்நுட்பங்களைக் கடந்து வளர்ந்துவிட்டது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு தொலைதூரத்தில் இருக்கும் ஒருவருக்கு செய்தி அனுப்புவது அவ்வளவு எளிதானதாக இல்லை. அப்போது தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் Morse Code.

Continues below advertisement

மோர்ஸ் கோட் என்றால் என்ன ?

Morse Code என்பது ஆங்கில எழுத்துக்கள், எண்கள் மற்றும் சில குறியீடுகளை புள்ளி (.) மற்றும்கோடு (-)ஆகிய இரண்டு அடையாளங்களின் மூலம் வெளிப்படுத்தும் தகவல் தொடர்பு முறை. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனி புள்ளி, கோடு அமைப்பு இருக்கும். உதாரணமாக, ‘A’ என்ற எழுத்துக்கு .-, ‘B’ என்ற எழுத்துக்கு -... என குறியீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் மிகவும் பிரபலமான குறியீடு ... --- ... ஆகும். இதுSOSஎன்ற அவசர உதவிக்கான சர்வதேச குறியீட்டை குறிக்கிறது.

கண்டுபிடித்தவர்

Morse Code முறையை அமெரிக்க கலைஞரும் கண்டுபிடிப்பாளருமான சாமுவேல் மோர்ஸ் மற்றும் அவரது குழுவினர் உருவாக்கினர். 19ஆம் நூற்றாண்டில் தொலைத்தொடர்பு வளர்ச்சியடைந்தபோது, மின்சார சிக்னல்களின் மூலம் தகவல்களை தொலைதூரத்திற்கு அனுப்புவதற்கு இந்த முறை பயன்படுத்தப்பட்டது. Telegraph கருவியின் உதவியுடன் அனுப்பப்படும் குறுகிய சிக்னல் புள்ளியாகவும், நீண்ட சிக்னல் கோடாகவும் புரிந்துகொள்ளப்பட்டது.

Continues below advertisement

பயண்பாடு

இந்த முறையின் முக்கிய சிறப்பு, சிக்கலான தகவல்களையும் எளிய சிக்னல்களாக மாற்றி அனுப்ப முடிந்ததுதான். கம்பி வழியாக மட்டுமின்றி ஒளி, ஒலி மற்றும் ரேடியோ சிக்னல்கள் மூலமாகவும் Morse Code தகவல்களை அனுப்ப முடிந்தது. இதனால் கடல் பயணம், ராணுவத் தகவல் தொடர்பு மற்றும் அவசரகால தகவல் பரிமாற்றம் போன்றவற்றிலும் இது முக்கியப் பங்கு வகித்தது.

காலப்போக்கில் தொலைபேசி, ரேடியோ, செயற்கைக்கோள் தொடர்பு மற்றும் இணையம் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்ததால் Morse Code-ன் அன்றாட பயன்பாடு குறைந்துவிட்டது. இருந்தாலும், அதன் எளிமை காரணமாக இன்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட தகவல் தொடர்பு முறையாக அது பார்க்கப்படுகிறது.

புள்ளியும் கோடும் மட்டுமே பயன்படுத்தி ஒரு முழு செய்தியையே அனுப்ப முடியும் என்பதுதான் Morse Code-ன் மிகப்பெரிய சுவாரஸ்யம். தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும், தகவல் தொடர்பு வரலாற்றில் Morse Code ஏற்படுத்திய தாக்கம் தனித்துவமானதாகவே உள்ளது.