எல்லா தரப்பு மக்களையும் கையடக்க செல்பேசி ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது.  அது நல்லதா கெட்டதா என்ற விவாதத்திற்குள் நாம் செல்ல வேண்டாம் . மொபைல் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்ட சூழலில் பலருக்கும் இருக்கும் பிரச்சனைகளுள் ஒன்று மொபைலின் நினைவக  பிரச்சனைதான்.  சிலர் 256 ஜிபி அளவு நினைவக திறன் கொண்ட மொபைல்போன்களை வாங்கினாலும் கூட குறிப்பிட்ட சில மாதங்களில்  நினைவகம் நிரம்பிவிடுகிறது. இதற்கான தீர்வு என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.




நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், உங்கள் ஃபோனின் storage space ஐ பார்த்து , உண்மையில் எது உங்கள் மொபைலில் அதிக இடத்தை எடுத்துக் கொள்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.
ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்துபவர்கள் Settings –> battery and device care –> storage என்னும் வசதி மூலம் உங்களது நினைவக திறனை அறிந்துக்கொள்ளலாம். ஐபோன் பயன்படுத்துபவர்கள் Settings –> General –> iPhone storage என்னும் வசதியை பயன்படுத்தி நினைவக திறனை அறிந்துக்கொள்ளலாம்.  புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அதிகமாக இருந்தால் ஐபோன் பயனாளர்கள் ஐ கிளவுட்டிலும் , ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் ட்ரைவ் அல்லது கூகுள் ஃபோட்டோஸிலும் உங்களது ஆவணங்களை மாற்றிக்கொள்ளுங்கள் . அதுவும் நிரம்பிவிட்டால் ஹார்ட் டிஸ்க் அல்லது லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களுக்கு யுஎஸ்பி கேபிள் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.




அடுத்ததாக நீங்கள் ஒரு இசை பிரியர் , உங்கள் மொபைலில் அதிகமாக பாடல்கள் இருக்கிறது என்றால் அதனை டெலிட் செய்துவிட்டு ஆன்லைன் ஸ்ட்ரீமிங் அப்ளிகேஷனை பயன்படுத்த துவங்குங்கள். அடுத்ததாக நீங்கள் பயன்படுத்தாத செயலிகள் இருந்தால் அதனை offload அல்லது டெலிட் செய்துவிடலாம். offload  செய்வதனால் பயன்பாடுகள் இருக்காதே தவிர அதன் தரவுகள் நீங்காது. வாட்ஸப் போன்ற செயலிகளில் பகிரப்பட்ட புகைப்படங்கள் , வீடியோக்கள் , ஆவணங்கள் உள்ளிட்டவற்றை நீக்கவும் மறக்காதீர்கள்.பகிரப்பட்ட படங்கள், வீடியோக்கள் மற்றும் GIFகள் அனைத்தும் அதிக இடத்தை எடுத்துக்கொள்ளும்.ஐபோன் பயன்படுத்துபவர்கள் ettings app –> select General –> select iPhone Storage –> select Review Large Attachments –> tap Edit   என்னும் வசதிக்குள் சென்று அதிக நினைவிடம் கொண்டம் , தேவையற்ற ஆவணங்களை நீக்கலா, அதே போல ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்கள் Files app –> tap Images or Videos –> open the Messages folder  என்னும் வசதிக்குள் சென்று புகைப்படங்கள் , உரைகளை தேர்வு செய்து டெலிட் பட்டனை கிளிக் செய்யுங்கள்.