வெகுநாளாக உலகமே பெரிதாக எதிர்பார்த்து காத்திருந்த ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் வெளியாகியுள்ளன. முந்தைய மாடல்களில் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த பல முக்கிய அம்சங்களான, செயற்கைகோள் கனெக்சன், விபத்து அறிவிப்பு வசதி போன்ற அம்சங்களோடு ஆப்பிள் ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய மொபைல்கள் வெளியாகியுள்ளன.
விலையுயர்ந்த ஐபோன்
அமெரிக்காவின் கியூபர்டினோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் புதிய சாதனங்களை அறிமுகம் செய்து வைத்தார். இந்த மொபைல்கள் இதுவரையில்லாத அளவு விலை பட்டியலை கொண்டுள்ளன. இதுவரை ஆப்பிளில் வெளியிடப்பட்ட மொபைல்களில் காஸ்ட்லி மொபைல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச விலை 1,89,900 வரை செல்கிறது. ஐ-போன் 14 சீரிஸ் ரகத்தில் மொத்தம் 5 வகை போன்கள் வெளியாகி உள்ளன. ஐபோன் 14 -ன் தொடக்க விலை 79 ஆயிரத்து 900 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 14 பிளஸ் - ன் தொடக்க விலை 89 ஆயிரத்து 900 ரூபாயாகவும், ஐபோன் 14 புரோ-வின் தொடக்க விலை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 900 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஐபோன் 14 புரோ மேக்ஸ் -ன் தொடக்க விலை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 900 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது
இதுவரை இல்லாத புதிய அம்சங்கள்
ஐபோன் 14 ரக செல்போன்கள் வரும் 16-ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. இதில் ஆப்பிளின் பல ஆண்டு திட்டமான செயற்கைக்கோள் அவசர அழைப்பு வசதி இடம்பெறுகிறது. இந்த வசதி இடம்பெறும் முதல் மொபைல் இது தான். அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ளவர்கள் 2 ஆண்டுகளுக்கு இச்சேவையை இலவசமாக பெற முடியும். அதுமட்டுமின்றி ஆப்பிள் இத்தனை ஆண்டுகள் செய்யாத நிறைய விஷயங்களை இதில் செய்துள்ளது. ஆப்பிள் மொபைலில் டிஸ்பிளேயில் மேலே கேமரா, ஸ்பீக்கர், சென்சார் இருக்கும் பகுதிகள் பெரிதாக இருக்கும். தற்போது வரும் ஆண்டராய்டு மொபைல்களை எல்லாம் பன்ச் ஹோல் டிஸ்பிளே என சிறிதாக மாற்ற ஆப்பிள் அதனை செய்யாமலேயே இருந்து வந்தது. தற்போது அதனை ஒரு சிறிய மாத்திரை வடிவில் கொண்டு வந்துள்ளது பார்ப்பதற்கு மேலும் அழகான லுக்கை கொடுக்கிறது.
ஐபோன் 14
ஆப்பிள் ஐபோன் 13இல் இடம்பெற்றுள்ள அதே A15 பயோனிக் சிப் கொண்டு வெளியாகியுள்ளது 14. ஆனால் அதன் அப்கிரேட் செய்யப்பட்ட தொழிநுட்பத்தினால் முந்தைய மாடலை விட 18% வேகமாக வேலை செய்யும் என்று குறிப்பிட்டுள்ளனர். IP68 வாட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் கொண்டுள்ளது. 12MP+12MP இரண்டு பின்பக்க கேமரா, 12MP முன்பக்க கேமரா ஆகியவை அடங்கும். மிட்நைட், ஸ்டார்லைட் , ப்ளு, பர்ப்பில் மற்றும் ப்ரொடக்ட் ரெட் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. 6.1இன்ச் ரெட்டினா XDR டிஸ்பிளே, டூயல் இ-சிம் வசதி, விபத்து அறிவிப்பு வசதி(crash detection), எமெர்ஜென்சி எஸ்ஓஎஸ் வசதி ஆகியவை அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்: கோவையில் ஒரே அறையில் கதவின்றி கட்டப்பட்ட 2 கழிவறைகள் - நெட்டிசன்கள் விமர்சனம்
ஐபோன் 14 ப்ளஸ்
ஆப்பிள் 14இல் உள்ள அதே வசதிகளோடு, 6.7இன்ச் பெரிய டிஸ்பிளே வசதியோடு வெளியாகியுள்ளது ஆப்பிள் ஐபோன் 14 ப்ளஸ். A15 பயோனிக் சிப் ப்ராசசர் உடன், 12MP+12MP பின்பக்க கேமரா + 12MP முன்பக்க கேமரா வருகிறது. ஐபோன் 14 போலவே IP68 வாட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் உள்ளது. அதைவிட கூடுதல் அளவாக 6.7இன்ச் ரெட்டினா XDR டிஸ்பிளே உடன் வருகிறது. 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 512GB வரை சேமிப்பு வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மிட்நைட், ஸ்டார்லைட் , ப்ளு, பர்ப்பில் மற்றும் ப்ரொடக்ட் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. டூயல் இ-சிம் வசதியுடன் இந்த மொபைல் வருகிறது. விபத்து அறிவிப்பு வசதி (crash detection), எமெர்ஜென்சி எஸ்ஓஎஸ் வசதி ஆகியவையும் கிடைக்கின்றன.
ஐபோன் 14 ப்ரோ
முதன்முறையாக A16 பயோனிக் சிப் ப்ராசசருடன் இது இயங்குகிறது. ஸ்மார்ட் போன் வரலாற்றில் அதிவேக ப்ராசஸரோடு வெளியாகியுள்ள அதிநவீன ஐபோன் மாடல் இது. இதன் இன்-டிஸ்பிளே டைனமிக் ஐலேண்ட் வசதி தனித்துவமான வரவேற்பை பெற்றுள்ளது. ஐபோன் கேமராக்கள் எப்போதுமே 8MP, 12 MP என்றுதான் தருவார்கள் அதிலேயே அந்த குவாலிட்டியை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. ஆனால் இதில் முதன்முறையாக கேமரா மேகாபிக்சலை 48 வரை உயர்த்தி இருக்கிறார்கள். 48MP மெயின் கேமரா +12MP அல்ட்ரா வைட் கேமரா +12MP டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவை பின்பக்க கேமராவில் கொடுக்கப்பட்டுள்ளது. 12MP ட்ருடெப்த் முன்பக்க கேமராவுடன் வருகிறது. அதோடு இதில் ஆப்பிள் ப்ரோ ரா போட்டோ வசதி ஆகியவையும் வரவவேற்ப்பை பெற்றுள்ளன. முன்பின் இருந்ததை விட ஸ்டோரேஜ் வசதியும் அதிகம், 1 டிபி ஸ்டோரேஜ் கொடுப்பட்டுள்ளது. இந்த மொபைல் 30 நிமிடத்தில் 50 சதவிகிதம் சார்ஜ் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. மற்றபடி டூயல் இ-சிம், எம்மீர்ஜன்சி எஸ்ஒஎஸ், IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட், டெஸ்டப்ரூப் ஆகியவை மற்ற மொபைல்களை போலவே வருகின்றன. இந்த மொபைல் 6.1இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்பிளே உடன் வருவது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்
ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோவில் நம் கண்ட அதே வசதிகளுடன் 6.7இன்ச் பெரிய டிஸ்பிளேயில் வெளியாகியுள்ளது ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ். ஸ்பேஸ் ப்ளாக், டீப் பர்ப்பில், சில்வர் மற்றும் கோல்ட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்