உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று இருந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு துறையை சேர்ந்த நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணி செய்யும் முறையை அறிமுகம் செய்திருந்தன. குறிப்பாக, கணினி மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணி செய்யும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை அளித்திருந்தனர். 


இந்த நிலையில், இந்த வொர்க் ஃப்ரம் ஹோம் தொடர்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த ஆய்வில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி வீட்டில் இருந்து பணி செய்வது தொடர்பாக பணியாளர்கள் மற்றும் மேலாளர்கள் ஆகிய இருவருக்கும் வெவ்வேறு கருத்து உள்ளது தெரிய வந்துள்ளது. 




மேலும் படிக்க: 10,000 ரூபாய்க்குள் டாப் மாடல் டிவி.க்கள்... வாங்குவது எப்படி?




அதாவது, வீட்டில் இருக்கும் பணி செய்யும் போது ஊழியர்கள் மிகவும் குறைந்த அளவிலான வேலையை செய்வதாக மேலாளர் கருதுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால் பணியாளர்கள் அதற்கு மாறாக வீட்டில் இருந்து பணி செய்வதால் அவர்கள் வேலை செய்யும் திறன் மற்றும் வேலை ஆகியவை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 11 நாடுகளிலுள்ள சுமார் 20 ஆயிரம் நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.


 






அந்த ஆய்வில் 87 சதவிகித பணியாளர்கள் தங்களுடைய வேலை திறன் மற்றும் வேலை வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு மாறாக 80 சதவிகித மேலாளர்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் வேலை செய்வது குறைந்துள்ளதாக கருதுகின்றனர். 


மேலும், இந்த கொரோனா பெருந்தொற்று தொடங்கிய காலத்திலிருந்து பல்வேறு நபர்கள் தங்களுடைய பணியை மாற்றியுள்ளதாக ஆய்வு தெரிவித்துள்ளது. குறிப்பாக 1997ஆம் ஆண்டிற்கு பிறகு பிறந்த Generation Z  ஊழியர்கள் இந்த வேலை மாற்றத்தில் அதிகம் ஈடுபட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. இதை  ‘Great Reshuffle’ என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.


இந்த ஆய்வறிக்கை தொடர்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாடெல்லா கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்த ஆய்வில் 80 சதவிகிதத்திற்கு மேல் உள்ள ஊழியர்கள் தாங்கள் அதிகமாக வேலை செய்வதாக தெரிவிக்கின்றனர். வொர்க் ஃப்ரம் ஹோம் முறை தொடர்பாக ஊழியர்கள் மற்றும் மேலாளர்கள் இடையே ஒரு இடைவேளை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு அறிக்கையின் முடிவு தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த முடிவு தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.




மேலும் படிக்க: வாட்ஸ்அப், ஸ்கைப், கூகுள் டுவோ செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடா?- மசோதா கூறுவது என்ன?