மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யா நாடெல்லா செயல்பட்டு வருகிறார். இவருடைய மகன் ஸெயின் நாடெல்லா பிறக்கும் போதே பெருமூளை வாத நோயால் அவதிப்பட்டு வந்தார். இவர் பிறப்பு முதல் சக்கர நாற்காலியின் உதவியுடன் இயங்கி வந்திருந்தார். இந்நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென உடல்நல கோளாறு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.