எம்.ஜி சைபர்ஸ்டெர் கான்செப்ட் கார் எம்.ஜி நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் கார் என்பது குறிப்பிடத்தக்கது. 1962ம் ஆண்டு வெளியான எம்.ஜி எம்.ஜி.பி என்ற கிளாசிக் விண்ட்டேஜ் காரின் சில அமசங்கள் இந்த புதிய சைபர்ஸ்டெரில் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1920களில் பிரிட்டிஷ் நாட்டை தலைமையமாக கொண்டு உருவான இந்த நிறுவனம் பல கான்செப்ட் கார்களை உருவாகியுள்ளது.   


கான்செப்ட் கார்கள் : 


பொதுவாக ஆடம்பரகார் தயாரிப்பில் உள்ள நிறுவனங்கள் தங்களுடைய புதுவகை கார்களை தயாரித்து அறிமுகம் செய்யும் நோக்கில் கொண்டுவந்த ஒரு 'கான்செப்ட்' தான் கான்செப்ட் கார்கள். கான்செப்ட் கார்களை பொறுத்தவரை காரின் வெளித்தோற்றம், உள்கட்டமைப்பு போன்ற விஷயங்களில் நிறுவனங்கள் அதிகம் கவனம் செலுத்தும். அந்த மாடல் மக்களுக்கு மிகவும் பிடித்துப்போனபட்சத்தில் அந்த குறிப்பிட்ட வாகனத்தை அதிக அளவில் அந்த நிறுவனம் தயாரிக்கும்.     




எம்.ஜி. சைபர்ஸ்டெர் கான்செப்ட் :




ஷாங்காய் ஆட்டோ ஷோவில் இந்த கார் விரைவில் வெளியிடப்பட்டுள்ளது. கேமிங் ஸ்டைலில் உட்புற கட்டமைப்பு கொண்ட கேமிங் காக்பிட் பொருத்தப்பட்ட உலகின் முதல் சூப்பர் கார் என்ற பெருமையை பெறவுள்ளது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்யப்பட்டால் சுமார் 800 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும் 0 - 100கிலோமீட்டர் வேகத்தை எட்ட இதற்கு 3 வினாடிகள் தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது.