பிரபல மெட்டா நிறுவனம் தனது புதிய விஆர் ஹெட்செட்டை வருகிற அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது.


மெட்டா கனெக்ட் மாநாடு :


பிரபல ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் தனது பெயரை மெட்டா என மாற்றியது. தற்போது அந்த நிறுவனம் வெர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. அதன் அடிப்படையில் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், நிறுவனத்தின் அடுத்த பெரிய VR ஹெட்செட்டிற்கான வெளியீட்டு விவரங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்களை பகிர்ந்திருக்கிறார்.தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்டில் அளித்த பேட்டியில், அக்டோபரில் நடைபெறும் மெட்டாவின் கனெக்ட் மாநாட்டில் இந்த புதிய வி ஆர் ஹெட்செட்டை அறிமுகம் செய்யவுள்ளதாக மார்க் தெரிவித்துள்ளார்.




புதிய ஹெட்செட் குறித்து மார்க் சக்கர்பெர்க் :


முகபாவனைகளைக் கண்காணிக்கும் திறன் மற்றும் அவற்றை  பயனாளர்களின் மெய்நிகர் அவதாரத்தில் (virtual avatar ) பிரதிபலிக்கும் திறன். ஆகியவற்றுடன் வரவுள்ளது.  மக்களை இணைக்கும் தொழில்நுட்பத்தின் இறுதி வெளிப்பாடாக VR ஐப் பயன்படுத்துவதில் தனது கவனம் உள்ளது  உதாரணமாக  VR -க்குள் கண் தொடர்புகளை எளிதாக்குவதன் மூலம் கணெக்ட் செய்துக்கொள்ள முடியும்  என மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். வெர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் என்றால் உண்மையில் அதனை பயன்படுத்தும் பயனாளர் அங்கு இருப்பது போல உணர்வாரா என கேட்டதற்கு “ நீங்கள் ஒரு வீடியோ அழைப்பில் இருக்கும்போது, ​​அந்த நபருடன் நீங்கள் இருப்பதைப் போல் உண்மையில் நீங்கள் உணர மாட்டீர்கள். என்னைப் பொறுத்தவரை, வெர்ச்சுவல்  ரியாலிட்டி   என்னவென்றால், நீங்கள் அங்கு இருக்கிறீர்கள் என்பதை உங்கள் மூளைக்கு உணர்த்துகிறது  அவ்வளவுதான் “ என்றார்.




மெட்டாவின்  VR ஹெட்செட் விலை எவ்வளவு ?


இந்த புதியு VR ஹெட்செட் திட்டம் குறித்து கடந்த ஆண்டு நடைப்பெற்ற கனெக்ட் நிகழ்ச்சியில் மார்க்  குறிப்பிட்டிருந்தார். இந்த வெர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டின் பெயர் ”மெட்டா குவெஸ்ட் ப்ரோ” என பிரபல ப்ளூம்பெர்க் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. சிலர் இதனை ப்ராஜெக்ட் கேம்ப்ரியா என அழைக்கின்றனர். என்ன பெயராக இருந்தாலும் மெட்டா நிறுவனத்தின் விலை உயர்ந்த கேட்ஜெட்ஸ் பட்டியலில் நிச்சயமாக  விஆர் ஹெட்செட் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. முன்னதாக மெட்டாவின்  Quest 2 வெர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டின் விலையை மெட்டா நிறுவம் உயர்த்துவதாக அறிவித்தது. கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட அறிவிப்பில் 128GB சேமிப்பகம் கொண்ட Quest 2    $299  இலிருந்து $399 ஆகவும், 256GB கொண்ட விலையுயர்ந்த Quest 2  மாடல் $399 இலிருந்து $499 ஆக உயரும் என தெரிவித்திருந்தது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.25ஆயிரத்தில் இருந்து விற்பனைக்கு தொடங்கும். இப்படியான சூழலில் நிச்சயம் புதிய VR ஹெட்செட் விலை ஏற்கனவே உள்ள  Quest 2  மாடலை விட அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.