ஆப்பிள் நிறுவனம் தனது சமீபத்திய M2 சிப்செட்டை WWDC 2022 இல் வெளியிட்டது. தற்போது இந்த சிப்செட் பொருத்தப்பட்ட இரண்டு லேப்டாப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது. மேக்புக் ஏர் (2022) மற்றும் மேக்புக் ப்ரோ (2022)  என இரண்டு பெயர்களில் அறிமுகமாகியுள்ளன. மேக்புக் ப்ரோ (2022)   இல் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பது குறித்து பார்க்கலாம்






மேக்புக் ப்ரோ (2022)  வசதிகள் :


மேக்புக் ஏர் (2022) போலவே, புதிதாக அறிவிக்கப்பட்ட மேக்புக் ப்ரோ (2022) ஆனது புதிய M2 சிப்செட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது.4GB வரை ஒருங்கிணைந்த நினைவகத்தையும் 2TB வரை சேமிப்பையும் தேர்வு செய்யலாம். மேக்புக் ப்ரோ (2022) ஆனது 13-இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. மேக்புக் ப்ரோ (2022) ஆனது 13-இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் படி, P3 வண்ண ஆதரவுடன் 500 நிட்கள் வரை ஒளிரும் தன்மையுடன் வருகிறது. மேக்புக் ப்ரோவில் து active cooling system  பொருத்தப்பட்டுள்ளது.MacBook Pro ஆனது ஒரே சார்ஜில்  20 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்கும் என கூறப்படுகிறது. 13.30-inch திரையுடன் ,Apple M2 புராசஸருடன் வெளிவருகிறது.8GB ரேம் வசதிகளுடன்  256GB எஸ்.எஸ்.டி வசதியும் கிடைக்கிறது.


 






விலை:
13 இன்ச் ஆப்பிள் மேக்புக் ப்ரோ (2022) $1,299 (தோராயமாக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 1,01,000) இல் தொடங்குகிறது. இந்தியாவில், புதிய மேக்புக் மாடல்கள் அடுத்த மாதம் முதல் கிடைக்கும்.M2 உடன் 13 இன்ச் மேக்புக் ப்ரோ ஆரம்ப விலை ரூ. 1,29,900 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.  கல்விக்கான மேக் புக் மாடல் ரூ. 1,19,900 விற்ப்னையாகும் என கூறப்படுகிறது