கொரோனா காரணமாக லாக்டவுன் போடப்பட்டு பலர் வேலையின்றி இருந்த நிலையில் வேலையை வீட்டிலிருந்து செய்துகொள்ள முடிந்த வேலைகளை அதற்கேற்றவாறு நம்மை தகவமைத்துக்கொள்ள வைத்தது கடந்த காலங்களின் சூழ்நிலை. அப்படி வீட்டிலிருந்து வேலை செய்ய அதிவேக இன்டர்நெட் தேவைப்படும். பெரும் நகரங்களில் வேலை செய்யும் பலரும் அதிவேக இன்டர்நெட் கிடைக்காத கிராமங்களில் வசிப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்ததுதான் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவை. அதன் மூலம் தற்போது அனைத்து பிராட்பேண்ட் சேவை நிறுவனமும் கிட்டத்தட்ட எல்லா கிராமங்களுக்கும் சென்றுவிட்டனர். அப்படி இல்லாத கிராமங்களில் வயர்லெஸ் வைஃபை கலாச்சாரமும் அதிகரித்துவிட்டது. இந்நிலையில் பிராட்பேண்ட் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர அதிவேக இன்டர்நெட்டும், அதனை குறைந்த விலையிலும் கொடுத்து வருகின்றன.


இந்நிறுவனங்களில் பலர் ஹை-ஸ்பீட் இன்டர்நெட் கனெக்ஷன்களை வழங்கி வருகிறார்கள். முன்பை போல இல்லாமல் புறநகர் பகுதிகள் மற்றும் சில கிராமப்புற பகுதிகளுக்கும் கூட பிராட்பேண்ட் அணுகல் பரவலாக கிடைக்கும் காரணத்தால், தங்களுக்கு ஏற்ற பிளான்களை தேர்வு செய்ய மக்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. வீட்டில் பல யூஸர்கள் மற்றும் டிவைஸ்கள் இருந்தால் ஹை-ஸ்பீட் இன்டர்நெட் கனெக்ஷன் இருப்பது பயனுள்ளதாக இருக்கும். அப்படி 1000 ரூபாய்க்கும் குறைந்த விலையில் பிராட்பேண்ட் பிளான்களை கொண்டுள்ள ப்ராண்டகளையும், அவை தரும் எக்ஸ்டரா வசதிகளையும் தெரிந்துகொள்ளலாம்.



ஜியோ ஃபைபர்


ஜியோ நிறுவனம் டேட்டா லிமிட் இன்றி 150 Mbps வரை டவுன்லோட் ஸ்பீடை பயனர்களுக்கு தருகிறது. மேலும் இந்த பிளானை எடுப்பவர்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய OTT சேவைகளும் கிடைக்கிறது. இது தவிர நெட்ஃபிக்ஸ், ஜீ 5, சோனி லிவ், ஆல்ட் பாலாஜி, வூட் செலக்ட், ஈரோஸ் நவ் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 15 ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு அணுகலை வழங்கும் திட்டங்களையும் ஜியோ வேறு ஒரு பிளானில் வழங்கி வருகிறது.


ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்


ஏர்டெல்லின் இந்த பிராட்பேண்ட் பிளானை எடுக்கும் பயனர்கள் 200 Mbps வேகத்திலான அன்லிமிட்டட் டேட்டா பெறலாம். பிராட்பேண்ட் இணைப்பைத் தவிர, டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் ஒரு வருடத்திற்கான அமேசான் ப்ரைமும் பெற முடியும். தேவைக்கேற்ப திரைப்படங்கள் அல்லது ஷோக்களை பார்ப்பதற்கு வசதியாக பயனர்கள் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப்பிற்கான வசதியையும் பெறலாம்.



பிஎஸ்என்எல்


BSNL வழங்கும் இந்த பிராட்பேண்ட் பிளான் 200 Mbps ஸ்பீடை கொண்டிருந்தாலும், மற்ற நிறுவனங்கள் வழங்கும் அன்லிமிட்டட் டேட்டாவை போலல்லாமல் 3.3 TB டேட்டா லிமிட்டை கொண்டுள்ளது. இந்த லிமிட்டை நீங்கள் தாண்டி விட்டால் 200 Mbps ஸ்பீடிற்கு பதிலாக 2 Mbps ஸ்பீடில் கனெக்ஷன் வேலை செய்யும். இந்த பிளான் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு இலவச பிரீமியம் சந்தாவுடன் வருகிறது. இது தவிர பிராட்பேண்ட் பயனர்கள் மாதம் ரூ.129-க்கு ஸ்ட்ரீமிங் வசதிகளை வழங்க YuppTV உடன் BSNL கூட்டு சேர்ந்துள்ளது. சினிமா பிளஸ் என்ற பிளானில் YuppTV, Zee5, SonyLIV மற்றும் Voot உள்ளிட்ட நான்கு OTT வசதிகள் கிடைக்கின்றன.


டாடா ஸ்கை


ரூ.950 விலையில் ஒரு மாதத்திற்கு 100 Mbps ஸ்பீடில் இன்டர்நெட் கனக்ஷனை டாடா ஸ்கை வழங்கினாலும், இந்த பிளானுடன் கூடுதலாக எந்த ஸ்ட்ரீமிங் சேவைகளையும் வழங்கவில்லை. இந்த பிளானை 3 மாதத்திற்கானதாக எடுத்தால் ரூ.900, 6 மாதங்களுக்கு எடுத்தால் ரூ.750, வருடத்திற்கு ரூ.700 என்ற கட்டணத்தின்படி முறையே ரூ.2,700, ரூ.4,500 மற்றும் ரூ.8,400 என்ற சலுகை விலையை பெறலாம்.