ஜியோ ஸ்மார்ட்போன் வாங்க ப்ளாண் பண்ணிருக்கீங்களா? முன்பதிவு அடுத்த வாரம் தொடங்குது!

ஜியோபோன் நெக்ஸ்ட் 4 ஜியின் விலை மற்றும் அம்சங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியே வராதபட்சத்தில், ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்கள் டிப்ஸ்டர் வழியாக வெளிவந்துள்ளன.

Continues below advertisement

 ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோபோன் நெக்ஸ்ட் 4 ஜி ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு அடுத்த வாரம் தொடங்கவுள்ளதால் மக்கள் தயாராக இருக்குமாறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்துக்கொள்ளும் பட்சத்தில் தொடக்கில் இருந்தே புதிய சலுகைகளை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக ஜியோ சிம், ஜியோ போன், ஜியோ பைபர் போன்றவற்றைப் பயன்படுத்தாத நபர்கள இல்லை என்று தான் கூறவேண்டும். இந்த வரிசையில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அவர்களுடைய 44 வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் மலிவான விலையில் அதிக வசதியுடன் கூடிய ஜியோபோன் நெக்ஸ்ட் என்கிற 4ஜி ஸ்மார்ட் போனினை அறிமுகம் செய்தது. கூகுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டு விலை குறைந்த ஸ்மார்ட்போன் வருகிற விநாயகர்சதுர்த்தி நாளான்று அதாவது செப்டம்பர் 10 ஆம் தேதி இந்தியாவில் முதல் விற்பனைக்கு வரவுள்ளது.

தற்போது ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முதல் முறை ஸ்மார்ட்போன் பயனர்களும் எளிதில் உபயோகிக்ககூடிய வகையில் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்துத் தயாரித்த மலிவான ஸ்மார்ட்போன் எப்போது சந்தைக்கு வரவுள்ளது என மக்கள் எதிர்ப்பார்த்துக் காத்துள்ளனர். இத்தகைய மொபைல் தங்களுக்கு எளிதில் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் தான், ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போனுக்காக முதல் ப்ரீ ஆர்டர் அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆனால் நிறுவனம் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் வெளியிடவில்லை என்றாலும் சில்லறை விற்பனை கடைகள் வழியாக கிடைத்துள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக முகேஷ் அம்பானி  வரவிருக்கும் இந்த ஜியோபோன் நெக்ஸ்ட உலகின் மிக மலிவான 4ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த மொபைல் எப்படி இருக்கும்? இதன் விலை என்னவாக இருக்கும்? என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் எழுத்தொடங்கியுள்ளது. எனவே அடுத்தவாரம் ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி யை ப்ரீ ஆர்டர் செய்வதற்கு முன்னர் என்னென்ன அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளது என்பதை நாம் முதலில் அறிந்துக்கொள்வோம்…

ரிலையன்ஸின் LYF-branded ஸ்மார்ட்போன்களைப் போல் இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போர்ட் இருக்காது. ஏற்கனவே கூறியபடி, ரிலையன்ஸ் மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் முதல் ஸ்மார்ட்போன் என்பதால் ,முதல் முறையாக ஸ்மார்ட்போன் வாங்குபவர்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.  அதன்படி, அதன்படி, ஜியோபோன் நெக்ஸ்ட் ஆனது 5.5 இன்ச் அளவிலான டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 215 SoC உடனாக 2 ஜிபி / 3 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி / 32 ஜிபி இஎம்எம்சி 4.5 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷனின் கீழ் இயங்கும் மற்றும் கூகுள் கேமரா கோவுடன் HDR, நைட் மோட் மற்றும் ஸ்னாப்சாட் பில்டர்களுக்கான ஆதரவுடன் வரும். கேமராக்களை பொறுத்தவரை, இது 13 எம்பி பின்புற கேமராவையும் மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா வசதியினைக்கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 4G VoLTE ஆதரவுடன் டூயல் சிம் கார்டு ஸ்லாட்ஸ் இருக்கும். மேலும் 2,500mAh பேட்டரி வசதியைக்கொண்டிருக்கும்.



  • இதுவரை இப்போன்களின் விலை மற்றும் அம்சங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியே வராதபட்சத்தில், ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்கள் டிப்ஸ்டர் வழியாக வெளிவந்துள்ளன. மேலும் தற்போது இந்தியாவில் இதன் விலை ரூ. 3499க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Continues below advertisement
Sponsored Links by Taboola