அண்மையில் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை விலைக்கு வாங்கினார். இதனால் அவர் அதிகமான பங்குகளை வைத்திருக்கும் நபர் என்ற பெருமையை பெற்றார். அதன்பின்னர் ட்விட்டரின் முழு பங்குகளையும் வாங்க திட்டமிட்டார்.
இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக்குழு தலைவர் பிரெட் டெய்லருக்கு அப்போது ஒரு கடிதம் எழுதினார். ட்விட்டர் நிறுவனத்தின் 100 பங்களையும் வாங்க திட்டமிட்ட அவர் அந்தக்கடிதத்தில், “ ட்விட்டர் நிறுவனத்தின் ஷேர் ஒன்றை 54.20 டாலர் என்ற முறையில் ரொக்கமாக கொடுத்து வாங்க விருப்பம் தெரிவிக்கிறேன். சந்தையின் இறுதி நாளான ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன்னர் 38 சதவீதம் பிரீமியமாக தருகிறேன். என்னுடைய இந்த சலுகை சிறந்தது இறுதியானது. இதை ஏற்காவிட்டால், ட்விட்டரில் நான் பங்குதாரராக இருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டியதிருக்கும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை, டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க்கிற்கு விற்பனை செய்வதற்கான இறுதிப் பேச்சுவார்த்தையில் நேற்று ஈடுபட்டது. அதன்படி ட்விட்டர் தளத்தை ஒட்டுமொத்தமாக 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்க முன்வந்தார் எலான். பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த டீல் ஒகே செய்யப்பட்டது. இதனால் விரைவில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டதால் பங்குச்சந்தையில் ட்விட்டரின் விலை ரூ.3 லட்சம் கோடி வரை உயர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், ''உலகெங்கிலும் உள்ள சுதந்திரமான பேச்சுக்கான தளமாக இருக்கும் என்று நான் நம்புவதால், ட்விட்டரில் முதலீடு செய்தேன், மேலும் செயல்படும் ஜனநாயகத்திற்கு பேச்சு சுதந்திரம் ஒரு சமூக கட்டாயம் என்று நான் நம்புகிறேன். ட்விட்டருக்கு அசாதாரண ஆற்றல் உள்ளது. அதை நான் அன்லாக் செய்கிறோம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.