ட்விட்டரில் ஒரு கேம் டெவலப்பர் பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட்டில், பல நாட்களாக அப்டேட் செய்யப்படாத ஆப்களை ஆப் ஸ்டோரில் இருந்து நீங்குவதாக ஆப்பிள் நிறுவனம் மெயில் செய்துள்ளதாக தகவல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பிட்ட நேரத்தில் ஆப் அப்டேட் செய்யப்படவில்லை என்றால், 30 நாட்களில் அவர்களின் ஆப் ஆபிஸ்டோரில் இருந்து அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் மதிப்பாய்வுக்காக புதிய அப்டேட்டை சமர்ப்பிப்பதன் மூலம், இந்த நீக்கத்தை தடுக்கலாம் என்று கூறியுள்ளது. "30 நாட்களுக்குள் எந்த அப்டேட்டும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றால், அந்த ஆப் ஆபிஸ்டோரில் இருந்து அகற்றப்படும்,” என்று அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.










ட்விட்டரில் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்த புரோட்டோபாப் கேம்ஸ் டெவலப்பர் ராபர்ட் கப்வே கருத்துப்படி, "ஆப்பிள் தனது கேம் மோட்டிவோட்டோவை அகற்றுவதாக எச்சரித்து உள்ளது, ஏனெனில் அது மார்ச் 2019 முதல் அப்டேட் கொடுக்கப் படவில்லை. வாய்ஸ் ஆப் ஸ்டோர் விமர்சகராக அறியப்பட்ட டெவலப்பர் கோஸ்டா எலிஃப்தெரியோ தனது டீவீட்டில், "எந்தெந்த ஆப்களை அகற்ற வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் ஆப்பிள் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதாகத் தெரிகிறது. 2 வருடங்களாக நான் அதைப் அப்டேட் செய்யாததால், பார்வைக் குறைபாடுள்ள சமூகத்தினருக்காகப் பயன்படுத்தப்படும் எனது FlickType கீபோர்டின் பதிப்பையும் ஆப்பிள் நீக்கியது. ஆனால், பாக்கெட் காட் போன்ற கேம்கள், டெவலப்பர்களால் 7 ஆண்டுகளாக அப்டேட் செய்யப்படாமல் உள்ளன.” என்று கப்வேயின் ட்வீட்டுக்கு பதிலளித்த எலிஃப்தெரியோ ட்வீட் செய்தார்.






அந்த டெவலப்பர், கேம் பாக்கெட் காட் ஸ்கிரீன்ஷாட்களையும் பகிர்ந்தார். அதில் ஏழு ஆண்டுகளாக அந்த ஆப் அப்டேட் செய்யப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. அந்த ஆப்பின் டெவலப்பர்கள் ஆப்பிளிடமிருந்து இதேபோன்ற எச்சரிக்கையைப் பெற்றுள்ளார்களா இல்லையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆப்பிள் தளத்தில் "ஆப் ஸ்டோர் மேம்பாடுகள்" என்ற தலைப்பில் உள்ள ஒரு பக்கத்தில், "நிறுவனம் ஆப்களை மதிப்பிடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுகிறது. தற்போதைய மதிப்பாய்வு வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத, காலாவதியான ஆப்களை அகற்றுகிறது" என்று கூறுகிறது. டெவலப்பர்கள் தங்கள் ஆப்பை ஆப் ஸ்டோரில் வைத்திருக்க 30 நாட்களுக்குள் அப்டேட்டைட் வெர்ஷனை சமர்ப்பிக்கும்படி கேட்கப்படுவார்கள் என்றும் அந்த வலைதளப் பக்கம் கூறுகிறது. இருப்பினும், அந்த வலைப்பக்கத்தில் உள்ள தகவல் புதிய தகவலா என்பது தெளிவாகத் தெரியவில்லை.