சியோமி நிறுவனம் இன்று புதிய சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 108 எம்பி கேமரா, தரமான சிப்செட், 120W ஹைப்பர் சார்ஜ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்து உள்ளது.


இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலை அமேசான், Mi.com போன்ற சில தளங்களில் வாங்கி கொள்ளலாம். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட் போன் ரூ.39,999 விலையில் கிடைக்கிறது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜி பி மெமரி கொண்ட சியோமி 11டி ப்ரோ 5ஜி மாடலை ரூ.41,999-விலையில் பெறலாம். மேலும் 12ஜிபி ரேம் கொண்ட சியோமி 11டி ப்ரோ 5ஜி மாடலை ரூ.43,999-விலையில் வாங்கலாம்.



தகுதியான வங்கி கார்டுகளை பயன்படுத்தி மொபைலை ரூ.5000 தள்ளுபடியுடன் பெறாலாம். மேலும் இஎம்ஐ விருப்பங்களில கூட இந்த புதிய சியோமி ஸ்மார்ட் போனைவாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-பிட் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனில் 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்,1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.


இந்த சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட் போனில் குவால் காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி உள்ளது. இதனால் கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு இந்த சிப்செட் மிக அருமையாக பயன்படும். மேலும் அட்ரினோ 660 ஜிபியு ஆதரவு மற்றும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளிட்ட புதிய அம்சங்கள் இந்த புதிய மொபைலில் உள்ளது.


சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 108 எம்பி பிரைமரி Samsung HM2 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா +5எம்பி டெலிமேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோக் கால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி கேமரா உள்ளது. Time-lapse, Cinematic filters, ஆடியோ ஜூம், 8 கே வீடியோ பதிவு ஆதரவு, ஸ்லோ மோஷன் வீடியோ போன்றவைகளும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


இந்த புதிய ஸ்மார்ட் போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் போனின் செல்பீ கேமரா ஆனது 1080 பிக்சல் வரை வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கிறது. குறைவான வெளிச்சம் உள்ள இடங்களில் கூட நல்ல புகைப் படங்களை எடுக்க இது உதவும்.


சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் டூயல்-செல் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இதனுடன் 120 வாட் ஹைப்பர் சார்ஜ் ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் போனை குறுகிய நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும். இதில் கைரேகை ஸ்கேனர் மற்றும் பல சென்சார் வசதிகள் உள்ளது.


5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.