இன்ஸ்டாகிராம் ‘டீன் அக்கவுண்ட்ஸ்’ (Teen Accounts) என்ற பிரைவேசி அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. 18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பேரண்டல் கண்ட்ரோல் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


சமூக வலைத்தளங்களில் சிறார்களுக்கு எதிராக, குறிப்பாக 18 வயதுக்கும் உட்பட்டவர்களுக்கு கண்டெண்ட் பாதுகாப்பு பற்றி பெற்றோர்களுக்கு கவலை தரும் விஷயங்களுக்கு முடிவு தரும் நோக்கில் இந்த அப்டேட்டை வழங்கியுள்ளது.  மெட்டா நிறுவனம், 18 வயதுக்குட்பட்ட பயனர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு, சில மேம்படுத்தப்பட்ட தனியுரிமை மற்றும் Parental Guidance-களை அப்டேட் செய்துள்ளது.


இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவது அதிகரித்து வரும் நிலையில், மெட்டா நிறுவனம் பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. பயனர்களின் வசதி பாதுகாப்பு ஆகியவற்றுக்காக பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. 


இனி 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்கள் ஆட்டோமேடிக்காக ப்ரைவேசி புரோடெக்சன் ஆக்டிவேட் ஆகிவிடும். யாரெல்லாம் அவர்களை தொடர்பு கொள்ள முடியும், ஃபாலோ செய்யாதவர்கள் அவர்களுக்கு மெசேஜ் அனுப்பவோ டேக் செய்யவோ முடியாது. 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான Feed ஃபில்டர் செய்யப்பட்டு பாதுகாப்புடன் தகவல்கள் டிஸ்ப்ளே செய்யப்படும். தூங்கும் நேரத்தை கூட பெற்றோர்களால் நிர்வகிக்க முடியும். 


இந்த செட்டிங்ஸ் பெற்றோர்கள் கண்ட்ரோல் செய்ய முடியும். இதை மாற்ற வேண்டுமானால் பெற்றோர்களால் மட்டுமே முடியும்.


பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் யாரை ஃபாலோ செய்கிறார்கள், யார் அவர்களை ஃபாலோ செய்கிறார்கள், தினமும் எவ்வளவு நேரம் காணலாம், அவர்கள் தூங்கும் நேரத்தை செட் செய்திவிட்டால் இன்ஸ்டாகிராம் ஆக்டிவாக இருக்காது உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.


இந்த புதிய வசதிகள் பெற்றோர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். குழந்தைகள் அதிக நேரம் இன்ஸ்டாகிராம் பயன்பாடு குறித்து கவலையை தவிர்க்கவே இந்த புதிய அப்டேட் வெளியிடப்படுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 


இந்த அப்டேட் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இன்னும் 60 நாட்களில் இந்த வசதி அறிமுகம் ஆக இருக்கிறது. மற்ற நாடுகளில் 2025-ம் ஆண்டிற்குள் இந்த அப்டேட் வழங்கப்படும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.