பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு சொந்தமான சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம் மேலும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மக்கள் தங்கள் பகுதியில் காணாமல் போன குழந்தைகளைப் பற்றிய அறிவிப்புகளைப் பார்க்கவும் பகிரவும் உதவும். முக்கியமாக, ஒரு குழந்தை காணாமல் போய், ஒரு இடத்தில் உள்ள சட்ட அமலாக்க அதிகாரி அதற்கான எச்சரிக்கையை வெளியிட்டால், அது அப்பகுதியில் உள்ள பயனர்களின் இன்ஸ்டாகிராம் ஃபீட்டில் பிரதிபலிக்கும். இந்த அப்டேட் அறிமுகத்தில், காணாமல் போன குழந்தை பற்றிய தகவல் மற்றும் ஓரிரு படங்களுடன் அலர்ட்கள் எவ்வாறு தோன்றும் என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது.



இதற்கு ஆம்பர் அலர்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, ஈக்வடார், கிரீஸ், குவாத்தமாலா, அயர்லாந்து, ஜமைக்கா, கொரியா, லிதுவேனியா, லக்சம்பர்க், மலேசியா, மால்டா, மெக்சிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, ருமேனியா, தென்னாப்பிரிக்கா, தைவான், உக்ரைன், இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இன்ஸ்டாகிராமில் உள்ள ஆம்பர் அலர்ட் அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிடப்படும். இந்த அம்சம் இந்தியாவில் உடனடியாக கிடைக்காது என்றாலும், எதிர்காலத்தில் மேலும் பல நாடுகளுக்கு இந்த அம்சத்தை விரிவுபடுத்த உள்ளதாக இன்ஸ்டாகிராம் கூறியுள்ளது.


முன்னதாக, இன்ஸ்டாகிராம் நிறுவனம் தற்போது புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இன்ஸ்டா ரீல்ஸில் இனிமேல் கிரியேட்டர்களுக்கு கிரேடிட் கொடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இன்ஸ்டா ரீல்ஸில் பலரும் ஒரு நபர் போட்ட ஆடியோவை எடுத்து ரீல்ஸாக பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் அதை முதலில் பதிவிட்ட நபருக்கு சரியான கிரேடிட் கிடைப்பதில்லை என்ற வருத்தம் இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில் இதை சரி செய்யும் வகையில் ரீல்ஸ் வீடியோவில் கிரியேட்டர் டேக் கொண்டு வரப்பட்டுள்ளது. 


அதன்படி இன்ஸ்டா ரீல்ஸை பதிவேற்றம் செய்வதற்கு முன்பாக நீங்கள் கிரியேட்டராக இருந்தால் உங்களுடைய கணக்கின் பெயரை கிரியேட்டர் என்ற டேக்கில் சேர்த்து கொள்ளலாம். அதுவே நீங்கள் வேறு நபர் போட்டிருந்தை எடுத்து பதிவிடும் போது அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் அவருடைய கணக்கை கிரியேட்டர் டேக்கில் சேர்த்து கொள்ளலாம் என்ற புதிய வசதி கொடுக்கப்பட்டுள்ளது.


இந்தப் புதிய வசதியை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது: 



  •  இன்ஸ்டாகிராம் செயலியை திறந்து (+) ஐகானை தொட வேண்டும்.

  • புதிய பதிவை உருவாக்கி அடுத்து என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

  • பதிவில் எதாவது புதிய மாற்றம் செய்துவிட்டு அடுத்து என்பதை க்ளிக் செய்க

  • இங்கு கிரியேட்டர் கணக்கை டேக் செய்ய வேண்டும். 

  • அதன்பின்னர் உங்களுடைய வீடியோ வேறு ஒருவருடையது என்றால் அவரை இங்கு டேக் செய்ய வேண்டும்.

  • அதன்பின்னர் கிரியேட்டர் டேக்கை காட்டும் வகையில் Show Profile Categoryல் creator category டிஸ்ப்ளே செய்ய வேண்டும். 

  •  இவை அனைத்தையும் முடித்த பிறகு இன்ஸ்டா ரீல்ஸை ஷேர் செய்ய வேண்டும். 


இவ்வாறு இன்ஸ்டாகிராமின் புதிய வசதியை நாம் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.