இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் நேரம் 90 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது குறித்து இன்ஸ்டாகிராம் தரப்பில், ரீல்ஸ் வசதியை 90 விநாடிகளாக அதிகரித்துள்ளோம். இதன் மூலம், ரீல்ஸ் பயனாளர்கள் தாங்கள் நினைப்பதை இன்னும் சற்று அதிகமான நேரம் படமாக்கிக் காட்டலாம். சீன் க்ளிப்களை அதிகரிக்கலாம். இது பயனாளர்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.


டிக்டாக்கிற்கு மாற்று:


பேஸ்புக் கொஞ்சம் பழசு என்ற ஃபீல் கொடுக்க உருவானது இன்ஸ்டாகிராம். இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்னர், இன்ஸ்டாகிராம் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. 


இதனை சரியாக புரிந்து கொண்ட அந்த நிறுவனமும், வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப புதுப்புது அப்டேட்டுகளைக் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. டிக்டாக் செயலிக்கு போட்டியாகவே ரீல்ஸை அறிமுகப்படுத்திய இன்ஸ்டாகிராம், இப்போது அதில் பல்வேறு அப்டேட்டுகளைக் கொண்டு வந்து பயனர்களின் பாந்தமான செயலியாக மாறியுள்ளது. 


இன்ஸ்டாவின் பரிணாம வளர்ச்சியைப் பார்த்தால் முதலில் புகைப்படங்களை பகிரும் தளமாகவே அறிமுகமானது. செலிபிரிட்டிகளுக்கு இது ரொம்பவே தோதாக இருந்தது. ஹாலிவுட் தொடங்கு கோலிவுட் வரை இன்ஸ்டாவில் இல்லாத திரைப்பிரபலங்கள் குறைவு எனலாம். அந்த அளவுக்கு இன்ஸ்டா பிரபலமானது. இன்ஸ்டாகிராம் வைத்திருத்தல் புதிய ஸ்டேட்டஸ் சிம்பலானது. அதன் பிறகு இன்ஸ்டாவில் வீடியோஸ், ஸ்டோரீஸ் என்ற ஆப்ஷன்கள் வந்தன. தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆப்ஷன் வந்தது. 60 செகண்ட் வீடியோவை பகிரக்கூடிய ஒரு பொழுதுபோக்கு தளம் தான் ரீல்ஸ். தொடர்ச்சியாகவோ அல்லது எடிட் செய்தோ இதில் வீடியோக்களை ரீல்ஸாக பகிர முடியும். 




ஆம்பர் அலர்ட் டூல்: 
அண்மையில் இன்ஸ்டாகிராம் தனது செயலியில் காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்க ஆம்பர் அலர்ட் டூல்ஸ் அறிமுகப்படுத்தியது. இதை அமெரிக்காவின், காணாமல் போன உரிமை அத்துமீறலுக்கு உள்ளான குழந்தைகளுக்கான தேசிய மையத்தின் உதவியுடன் இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


இதன்மூலம் இன்ஸ்டா வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல சமூக அக்கறையும் கொண்டது தான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.


இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பது எப்படி?
இன்ஸ்டாகிராம் ஆப்பில்ல் வலது பக்கஹ்தில் ஸ்வைப் செய்து கீழே இருக்கும் ரீல்ஸ் ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆப்பில் இருக்கும் பிளஸ் ஐகானை சொடுக்கினால் கூட ரீல்ஸூக்கு நேரடியாக செல்லலாம். ரீல்ஸுக்கு சென்ற பின்னர் வீடியோவுக்கு நடுவில் இருக்கும் பிளேயர் ஐகானை பிரெஸ் செய்து வீடியோவை பதிவு செய்ய வேண்டும். ரீல்ஸ் வீடியோ எடுத்த பின்னர் அதில் ஸ்டிக்கர், இசை என என்ன வேண்டுமானாலும் உங்களின் விருப்பப்படி சேர்க்கலாம்.