உலக அளவில் சமூக வலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூக வலைதள நிறுவனங்களும் தங்கள் பயனாளர்களுக்கு புதிய அப்டேகளை அவ்வபோது வழங்கிவரும். சமூக வலைதளத்தில் குறுவடிவ வீடியோ கண்டென்ட்கள் டிரெண்ட் காலமிது. டிக்-டாக்கிற்கு இருந்த ரசிகர்கள் ஏராளம். அதற்கு தடை அறிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து, மெட்டா நிறுவனங்களான, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யுடியூப்களில் ஷாட்ஸ் என்ற குறுவடிவ வீடியோ கன்டண்ட் ப்ளாட்ஃபார்ம் அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த இரண்டு வாரங்களாக இன்ஸ்டாகிராம் பல்வேறு அப்டேட்களை வழங்கியது. தற்போது, இன்ஸ்டாகிராம் ஃபீட்-இல் வரும் கன்ட்ண்ட்களை வெர்டிகல் ஃபீட்களாக வழங்கும் வசதியை பரிசோதனை செய்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் ஹோம் ஃபீட்களில்(இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரும் போஸ்ட்கள்) வெர்டிகள் வடிவம் கொண்டுவரப்பட்டால், அது டிக்-டாக் போன்று இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் இந்த புதிய அப்டேட் குறித்து, இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி (Adam Mosseri) ஒரு வீடியோ மூலம் இதை உறுதி செய்திருக்கிறார்.
இந்த புதிய அப்டேட் எப்படியிருக்கும் என்று இன்ஸ்டாகிராம் நிறுவனம் பகிர்திருந்த ஒரு போட்டோவில், இன்ஸ்டாகிராம் ஃபீட் ஸ்மாட்ஃபோனின் முழு ஸ்கிரிலும் தெரியும் விதத்தில் இருந்தது.மேலும், அதில் ஹோம்-ஃபீட் டாப்பில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் இருப்பது போன்று இல்லை. ஆனால்,நீங்கல் ஸ்கொர்ல் செய்து பார்த்தால்,ஸ்டோரீஸ்களைப் பார்க்கலாம். நோட்டிஃவிகேசன்ஸ், மெசேஜ்ஸ் மற்றும் புதிய போஸ்ட் பதிவிடும் ஐகான் உள்ளிட்டவைகள் ஹோம்-ஃபீடின் மேல்பகுதியிலே இருக்கிறது.வீடியோ, ஃபோட்டோ ஆகியவைகள் ஃபுல் ஸ்கிரீன் அளவில் தெரியும் வசதியை இன்ஸ்டாகிராம் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளது.
சமீபத்தில், இன்ஸ்டாகிராம் நிறுவனம் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்தது. அதன்படி இன்ஸ்டா ரீல்ஸில் இனிமேல் கிரியேட்டர்களுக்கு கிரேடிட் கொடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இன்ஸ்டா ரீல்ஸில் பலரும் ஒரு நபர் போட்ட ஆடியோவை எடுத்து ரீல்ஸாக பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் அதை முதலில் பதிவிட்ட நபருக்கு சரியான கிரேடிட் கிடைப்பதில்லை என்ற வருத்தம் இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில் இதை சரி செய்யும் வகையில் ரீல்ஸ் வீடியோவில் கிரியேட்டர் டேக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
அதன்படி இன்ஸ்டா ரீல்ஸை பதிவேற்றம் செய்வதற்கு முன்பாக நீங்கள் கிரியேட்டராக இருந்தால் உங்களுடைய கணக்கின் பெயரை கிரியேட்டர் என்ற டேக்கில் சேர்த்து கொள்ளலாம். அதுவே நீங்கள் வேறு நபர் போட்டிருந்தை எடுத்து பதிவிடும் போது அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் அவருடைய கணக்கை கிரியேட்டர் டேக்கில் சேர்த்து கொள்ளலாம் என்ற புதிய வசதி கொடுக்கப்பட்டுள்ளது.