ஆண்டுகள் வந்து செல்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் எல்லாத்துறையிலும் டாப் 10 போடுவது ஒரு சம்பிரதாயம் ஆகிவிட்டதுபோல் அதை எதிர்பார்த்துக் காத்திருப்பதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கின்றது.
அந்த வகையில் 2021ல் மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட இணையதளங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.அலெக்ஸா டாட் காம் என்ற இணையதளம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
டாப் 10 இணையதளங்கள்:1 TikTok.com2 Google.com3 Facebook.com4 Microsoft.com5 Apple.com6 Amazon.com7 Netflix.com8 YouTube.com9 Twitter.com10 WhatsApp.com
இதுதான் டாப் 10 பட்டியல். 2021 பிப்ரவரியில் தான் டிக்டாக் முதலில் பட்டியலில் முதலிடத்துக்கு வந்தது. பிப்ரவரி 17, 2021ல் தான் அந்த நிகழ்வு நடந்தது. பின்னர் மார்ச்சில் சில நாட்களும் மே மாதத்தில் சில நாட்களும் டிக்டாக் அதிக பார்வையாளர்களைக் கொண்டிருந்தது. ஆகஸ்ட் 10, 2021க்குப் பின்னர் டிக்டாக் பல நாட்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது. அவ்வப்போது கூகுள் முதலிடத்தைப் பிடித்தது. தேங்க்ஸ் கிவிங் நாள் (நவம்பர் 25) மற்றும் பிளாக் ஃப்ரைடே (நவம்பர் 26) ஆகிய தேதிகளில் டிக்டாக் உச்சபட்ச பயன்பாட்டில் இருந்தது. இதனால் ஒட்டுமொத்த கணக்கீட்டில் டிக்டாக் முதலிடத்தில் உள்ளது. 2020 ஆம் ஆண்டில் 7வது இடத்தில் இருந்த டிக்டாக் 2021ல் முதலிடத்திற்கு வந்துள்ளது அபரிமித வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டுக்கான டாப் 10 சமூக வலைதளப் பட்டியலும் வெளியாகியுள்ளது.
அதன்படி,
1 TikTok.com2 Facebook.com3 YouTube.com4 Twitter.com5 Instagram.com6 Snapchat.com7 Reddit.com8 Pinterest.com9 LinkedIn.com10 Quora.com
ஆகிய சமூக வலைதளங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலிலும் டிக்டாக் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி பேஸ்புக் பயனாளர்கள் குறைவாக இருந்தனர். தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு பேஸ்புக் 4வது இடத்தில் இருந்தது. இதுவே பேஸ்புக் பின்னுக்குத் தள்ளப்பட காரணம் எனக் கூறப்படுகிறது. பேஸ்புக்குக்கு மாதம் தோறு சராசரியாக 2.9 பில்லியன் பயனாளர்கள் உள்ளனர். டிக்டாக்குக்கு வரும் பயனர்களில் பெரும்பாலோனோர் குழந்தைகளாக, பதின்ம வயதினராக இருக்கின்றனர்.
டிக்டாக் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டுவதாகக் கூறி அப்போதைய அதிபர் ட்ரம்ப் உத்தரவால் டிக்டாக் தடை செய்யப்பட்டது. அதேபோல், இந்தியாவிலும் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியர்கள் மத்தியில் இது பெரும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக் மட்டுமல்லாது நூற்றுக்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்