ட்விட்டர் இன்ஸ்டாகிராம் பேஸ்புக் ஆகிய பக்கங்களில் விலங்குகள் செடி கொடிகளின் வீடியோவைப் பார்ப்பதற்கு என்றே தனியாக ஒரு கூட்டம் ஒன்று. அன்றாட மன அழுத்தங்களில் இருந்து விடுபட இதுபோன்ற வீடியோக்கள் பெரிதும் உதவும். அப்படியான வீடியோக்களை நீங்கள் ரசிப்பவர் என்றால், IFS அதிகாரி சுசந்தா நந்தா சமீபத்தில் பகிர்ந்துள்ள வீடியோவை நீங்கள் தவறவிட கூடாது. அப்படியென்ன இந்த வீடியோவில் ஸ்பெஷல் எனக் கேட்கிறீர்களா? இடம்பெயரும் ஃபிளெமிங்கோக்கள் ஒரே கோட்டில் நகர்வதுதான் இந்த வீடியோ. பார்க்க அத்தனை அழகாக இருக்கும் இந்த வீடியோவை நீங்கள் லூப்பில் பார்க்க விரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.






அழகான இந்த வீடியோவில், கம்பீரமான ஃபிளமிங்கோக்கள் ஒரு நீர்நிலையைக் கடப்பதைக் காணலாம். சுமார் 10க்கும் மேற்பட்ட ஃபிளமிங்கோக்கள் நீரில் குழுவாகச் செல்வதைக் காணலாம். இந்த வீடியோவில் பசுமையான அழகான நீர்நிலை காட்டப்படுகிறது. வீடியோ பகிர்ந்துள்ள, சுசாந்தா நந்தா, “இயற்கையில், ஃபெர்பெக்டனஸ் என்ற ஒன்று கிடையவே கிடையாது. ஆனால் அனைத்துமே ஃபெர்பெக்ட்தான் , எல்லாமே சரியானதுதான்” என்று அதற்கு கேப்ஷன் எழுதியுள்ளார். இந்த வீடியோவை கிரீஸ் நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் படம் பிடித்துள்ளார்.


இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் பலரும் இயற்கையின் அழகை பற்றி பேசி வருகின்றனர். பயனர்களில் ஒருவர், "இது போன்ற ஒரு அழகான காட்சியைப் பார்த்ததே இல்லை" என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு பயனர் அந்த வீடியோ தனக்கு அமைதி அளிப்பதாகக் கூறியுள்ளார். மூன்றாவது பயனர் அதனை அற்புதமான காட்சி என வர்ணித்துள்ளார். 










ஃபிளமிங்கோக்கள் அவற்றின் ’S’ வடிவ கழுத்து, பிரகாசமான இளஞ்சிவப்பு நிற இறக்கைகள் மற்றும் ஸ்டில்ட் போன்ற கால்களால் வேறுபடுகின்றன. நேஷனல் ஜியோகிராஃபிக் சேனலின் தகவல்படி, ஃபிளமிங்கோக்கள் இரண்டு கால்களில் நிற்கின்றன, ஆனால் அவை தூங்கும் போது, ​​ஒரு பாலே நடன கலைஞரின் நளினத்துடன் ஒரு காலில் சமநிலையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.