உலகம் முழுவதும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களைப் போலவே வாட்ஸ் அப் செயலியும் யூஸர்களால் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாதாரண எஸ்.எம்.எஸ் செய்திகளை அனுப்புவதற்கு பதிலாக, வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் போது மெசேஜ் உடன் புகைப்படம், வீடியோ மற்றும் வாய்ஸ் மெசேஜ்களையும் அனுப்பலாம் என்பதால் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.


மேலும் எழுதவும், படிக்கவும் தெரியாதவர்கள் கூட வாட்ஸ் அப்பில் தகவல்களை அனுப்புவதற்கு வாய்ஸ் மெசேஜ் வசதி சிறப்பானதாக செயல்படுகிறது. தட்டச்சு செய்து மெசேஜ் செய்ய சோம்பலாக இருக்கிறதா?, வாட்ஸ் அப்பில் உள்ள மைக் பட்டனை அழுத்தி உங்களுடைய வாய்ஸ் மெசேஜை சில விநாடிகளில் அனுப்பி விடலாம். ஆனால் அந்த வாய்ஸ் நோட்டில் புதிது புதிதாக பயனாளர்களுக்கு பயன்பாட்டை ஸ்வாரஸ்யமாக மாற்றவும், எளிதாக மாற்றவும் முற்படும் விதத்தில் பல செயல்கள் செய்து வருகின்றது வாட்ஸ்ஆப் நிறுவனம்.


சமீபத்தில் ஐஒஎஸ் போன்களுக்கு வாய்ஸ் நோட்டை பாஸ் செய்து பின்னர் மீண்டும் பேசி அனுப்பும் வசதியை அறிமுகம் செய்திருந்தது. இப்போது ஒரு படி மேலே சென்று, ஆண்டராய்டு மொபைலுக்கும் சேர்த்து ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த  வசதி என்னவென்றால், நாம் ரெக்கார்டு செய்து அனுப்பும் வாய்ஸ் நோட்டை நாமே கேட்ட பிறகு அனுப்பும் ஆப்ஷன் கிடைத்துள்ளது. இதனை எப்படி அணுகுவது என்பதை பார்க்கலாம்.




  1. உங்களது போனில் இருக்கும் வாட்ஸ்ஆப் ஆப் அப்டேட்டடாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இல்லை என்றால் அப்டேட் செய்யுங்கள்.

  2. வாட்ஸ்அப்-ஐ திறந்து யாருக்கு வாய்ஸ் நோட் அனுப்ப வேண்டுமோ அவர்களுடைய சாட்டை திறக்கவும்.

  3. அதில் கீழே வலது புறத்தில் தரப்பட்டுள்ள மைக் ஐகானை லாங் பிரெஸ் செய்யவும்.

  4. ஹேண்ட்ஸ்-ப்ரீ மோடுக்கு அந்த ஐகானை மேலே ஸ்வைப் செய்யவும்.

  5. தற்போது, ரெக்கார்டு ஆகிக்கொண்டிருக்கும் வாய்ஸ் நோட்டை நிறுத்துவதற்காக சிகப்பு பட்டன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும். அதனை பயன்படுத்தி நிறுத்தலாம்.

  6. நிறுத்தியதும் அதனை பிளே செய்து பார்ப்பதற்கு இடது பக்கம் ஒரு பிளே பட்டன் இருக்கும்.

  7. பிளே செய்து பார்த்ததும் வழக்கம்போல அதனை அனுப்புவதென்றால் அதற்கென வலதுபுறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டனை அழுத்தலாம்.

  8. இந்த வாய்ஸ் நோட்டை அனுப்ப வேண்டாம், டெலிட் செய்யவேண்டுமென்றால் அதிலேயே டெலிட் பட்டனும் உண்டு.



இந்த அம்சத்தை பயன்படுத்தி வாய்ஸ் நோட்டை பெறுபவர் கேட்கும் முன்பே நாம் கேட்டுக்கொள்வதற்கான வசதி கிடைப்பதால், நாம் ரெக்கார்டு செய்த ஆடியோவில் அருகில் இருப்பவர் பேசும் சத்தம் கேட்கிறதா, நாம் பேசுவது ரெக்கார்டில் கேட்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள முடிகிறது. அதன் மூலம் இன்னும் எளிமையான ஸ்மூத்தான தொடர்பு வாட்ஸ்-ஆப் வழியாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.