Google Maps : இன்றைய காலகட்டத்தில் தெரியாத இடங்களுக்கும் அன்றாட பயணிக்கும் மக்களுக்கு ஒரு அத்தியாவசிய கருவியாக மாறிவிட்டது. கூகுள் மேப்ஸ் இருப்பினும், மலைப்பகுதிகளில் வாகனம் ஓட்டுவது, தொலைதூர இடத்திற்கு மலையேற்றம் செய்வது அல்லது அடிக்கடி நெட்வொர்க் துண்டிக்கப்படும் இடத்திற்கு பயணம் செய்வது சவால்களும் உள்ளன.
இது போன்ற நேரங்களில், கூகிள் மேப்ஸின் ஆஃப்லைன் அம்சம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். இணையம் இல்லாமல் கூட வரைபடங்களைப்(Maps) பதிவிறக்கம் செய்து துல்லியமான திசைகளைக் கண்டறிவது எப்படி என்பதையும், வரைபடத்தின் சில அற்புதமான அம்சங்களையும் இத்தொகுப்பில் காணலாம்.
பயணத்தை எளிதாக்கும் கூகுள் மேப்ஸ்
புகைப்படம் மூலம் பார்க்கும் வசதி - இப்போது நீங்கள் உலகெங்கிலும் உள்ள பயனர்களால் பதிவேற்றப்பட்ட ஒரு இடத்தின் புகைப்படங்களைப் நேரில் முன்பே பார்க்கலாம்.
நேரடிக் காட்சி - இந்த அம்சம் உங்கள் கேமராவைப் பயன்படுத்தி திசைகளை நிகழ்நேரத்தில் காட்டுகிறது. நீங்கள் கேமராவை இயக்கியவுடன் அம்புகளும் திசைகளும் திரையில் தோன்றும்.
AI-மூலம் கண்டறிதல்(obeject recognition) - உங்கள் கேமரா உங்களைச் சுற்றியுள்ள பொருட்களை அடையாளம் கண்டு அவற்றின் பெயர்கள் மற்றும் விவரங்களை வழங்க முடியும், இது புதிய இடங்களில் இடத்தை கண்டுபிடிக்க எளிதாக்குகிறது.
AI உரையாடல் தேடல் – இப்போது நீங்கள் உங்களுக்கு விருப்பமான மொழியில் கேள்விகளைக் கேட்கலாம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளைப் பெறலாம், அது ஒரு உணவகத்தைக் கண்டுபிடிப்பதாக இருந்தாலும் சரி அல்லது ஒரு பயணத்தைத் திட்டமிடுவதாக இருந்தாலும் சரி.
விமான கண்காணிப்பு கருவி - இப்போது நீங்கள் Google Maps மூலம் விமான அட்டவணைகளைப் பார்க்கலாம், கட்டணங்களை ஒப்பிடலாம் மற்றும் உங்கள் பயணத் திட்டங்களை எளிதாக மேம்படுத்தலாம்.
நெட் இல்லாமல் கூகுள் மேப்பை எப்படி பயன்படுத்துவது?
- நெட்வொர்க் பலவீனமாக உள்ள இடத்திற்கு நீங்கள் செல்கிறீர்கள் என்றால், இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மேப்சை ஆஃப்லைனில் எளிதாகப் பயன்படுத்தலாம்.
- கூகிள் மேப்ஸ் செயலியைத் திறக்கவும் (ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன்).
- நீங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளீர்கள் என்பதையும், Incognito mode-ல் இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- ஸ்கீரினின் மேல் வலது மூலையில் உள்ள உங்கள் சுயவிவரப் புகைப்படத்தைத் தட்டவும்.
- மெனுவிலிருந்து 'ஆஃப்லைன் வரைபடங்கள்' விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, 'உங்கள் சொந்த வரைபடத்தைத் தேர்ந்தெடு' என்பதைத் கிளிக் செய்யவும்.
- திரையில் நீல நிறப் பெட்டி வரைபடம் தோன்றும். பெட்டியை இழுத்து அல்லது பெரிதாக்கி நீங்கள் சேமிக்க விரும்பும் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது திரையின் அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள பதிவிறக்க பொத்தானைத் தட்டவும்.
- அவ்வளவுதான்! பதிவிறக்கம் செய்யப்பட்ட வரைபடம் இப்போது ஆஃப்லைன் வரைபடப் பிரிவில் சேமிக்கப்படும், இதை நீங்கள் இணைய இணைப்பு இல்லாமல் கூடப் பயன்படுத்தலாம்.