முன்பெல்லாம் கைப்பை காணாமல் போன பணமோடு சேர்ந்து அடையாள அட்டைகள், லைசன்ஸ் போன்ற ஆவணங்களும் காணாமல் போய்விடும். ஆனால் இப்போதெல்லாம் கைப்பையை விட முக்கியாமனதாக ஆகிவிட்டது செல்போன். நம்முடைய பர்சனல் தகவல்கள் அனைத்தும் சேகரிப்பட்டிருக்கும் ஒரு பெட்டகமாகவே இருக்கிறது செல்போன். வங்கி பரிவர்த்தணைகள், சுய விவரங்கள், புகைப்படங்கள் என அனைத்தும் செல்போனில்தான் உள்ளன. இதனை கணக்கிட்டே ஆன்லைன் மோசடிகளும் நடக்கின்றன. சரி, ஒருவேளை துரதிர்ஷட வசமாக செல்போன் காணாமல் போன நம்முடைய தகவல்களை பாதுகாப்பது எப்படி?
தொலைந்துபோன செல்போனை கண்டுபிடிக்கவோ, தகவல்களை லாக் செய்வதோ செய்யக்கூடிய காரியம் தான். ஆனால் இந்த வசதியை நாம் ஆன் செய்ய வேண்டுமென்றால் அதற்கான வசதி உங்கள் ஆண்ட்ராய்டு செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இந்த வசதியை செயல்படுத்த முடியும். கூகுளுடன் இணைக்கப்பட்ட உங்கள் போனில் இண்டர்நெட் ஆனில் இருந்தால் இந்த செயல்முறை சாத்தியமானது.
1. காணாமல்போன உங்கள் செல்போனில் இணைக்கப்பட்ட கூகுள் அக்கவுண்டை லாக் -இன் செய்து அதன்மூலம் தொடங்கப்பட வேண்டும்.
2.கூகுளுக்கு சென்று Find My Device பக்கத்திற்கு செல்ல வேண்டும்
3.உடனடியாக அந்த பக்கம் ஓபன் ஆனதும் உங்கள் செல்போனுக்கு நோடிபிகேஷன் செல்லும்
4.உங்கள் போனுக்கு நோட்டிபிகேஷன் செல்லவில்லை என்று நினைத்தால் Refresh பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்
5. அப்போது மீண்டும் செல்போனுக்கு நோட்டிபிகேஷன் செல்லும். அந்த நோட்டிபிகேஷன் செல்லும் நேரத்தில் கூகுள் மேப் மூலம் கிட்டத்தட்ட போன் இருக்கும் லொகேஷனை தெரிந்துகொள்ளலாம். அல்லது செல்போன் கடைசியாக பயன்படுத்தப்பட்ட லொகேஷனை தெரிந்துகொள்ளலாம்.
6.அதேபோல் இடதுபுறம் 3 ஆப்ஷன்கள் இருக்கு.
1. ஒலி எழுப்புதல் (play sound) - இதனை க்ளிக் செய்தால் போன் உடனடியாக ஒலி எழுப்பும். கையில் போன் இல்லை என தெரிந்த உடனேயே ஒலியை எழுப்பினால் கண்டுபிடிக்க உதவியாக இருக்கும்.
2.Secure Device
இந்த ஆப்ஷன் மூலம் செல்போன் ஸ்கிரீன் லாக், பாஸ்வேர்டை மாற்ற முடியும். அல்லது செல்போனை யாராவது கீழே கிடந்து எடுத்தாலும் அவர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக போன் நம்பரையும் கொடுக்க முடியும்.
3.Erase Device
இந்த ஆப்ஷன் கடைசி தேர்வாகவே இருக்க வேண்டும். Erase Device கொடுத்துவிட்டால் செல்போனில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் டெலிட் செய்யப்படும்.
காணாமல்போன செல்போனை கண்டுபிடிக்கவும், தகவல்களை பாதுகாக்கவும் இந்த வழிமுறைகளை கூகுள் ஏற்கெனவே அறிவித்துள்ளது. ஆனால் திட்டமிட்டு செல்போனை திருடும் கும்பல் செல்போனை திருடியதுமே ஸ்விட்ச் ஆப் செய்வதும், சிம் கார்டை தூக்கி வீசுவது என்பதையுமே வாடிக்கையாக வைத்துள்ளனர். அதுபோன்ற நேரங்களில் Find My Device பெரிய அளவுக்கு கைகொடுக்காது என்பது நெகட்டிவாக பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்