இன்ஸ்டாகிராம் பயனராக நீங்கள் இருந்தால், இந்த ட்ரெண்டிங்கை கடந்து வராமல் இருந்திருக்க மாட்டீர்கள்! ஏஐ உலகம் புதுப்புது கற்பனைக் கதவுகளைத் திறந்துகொண்டே செல்கிறது.
அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் தற்போது டிரெண்டாகி வரும் கப்பிள் போலராய்டு (Couple Polaroid) படங்களை ஜெமினி ஏஐ மூலம் எளிதாக உருவாக்கலாம். உங்கள் இணையுடன் அழகான போலராய்டு ஸ்டைல் படங்களை உருவாக்கலாம்.
ஸ்டெப் 1: ஜெமினி AI செல்லவும்
முதலில், கூகுளின் ஜெமினி AI தளத்திற்குச் செல்லவும். உங்கள் Google கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையவும். புகைப்படத்தை மட்டும் உள்ளிட கூகுள் கணக்கு தேவையில்லை.
ஸ்டெப் 2: ப்ராம்ப்ட் (Prompt) உருவாக்கவும்
கப்பிள் போலராய்டு படத்தை உருவாக்க நீங்கள் ஜெமினிக்கு ஒரு விரிவான ப்ராம்ப்ட்டை கொடுக்க வேண்டும். ப்ராம்ப்ட் எவ்வளவு துல்லியமாக இருக்கிறதோ, அந்த அளவிற்குப் படம் அழகாக வரும்.
மாதிரி ப்ராம்ப்ட்:
"Create a photo of a cute young couple, with a realistic appearance. They are standing close to each other, smiling warmly. The setting is a cozy cafe with soft lighting. The image should have a vintage polaroid effect, with slightly faded colors and a white border. The woman has long, dark hair and is wearing a floral dress. The man has short, styled hair and is wearing a casual shirt. The overall mood should be romantic and nostalgic."
இதேபோல உங்களுக்கு ஏற்ற வகையில், ப்ராம்ப்ட்களை எளிமையாக எழுதலாம். இதோ ப்ராம்ப்ட் எழுதுவதற்கான குறிப்புகள்:
- ஜோடியின் தோற்றம்: அவர்கள் எப்படி இருக்க வேண்டும்? (இளமையாக, வயதான, உயரம், நிறம், உடை, சிகை அலங்காரம் போன்றவை)
- போஸ்: அவர்கள் எப்படி நிற்கிறார்கள்? (கைகளைப் பிடித்தபடி, அணைத்தபடி, சிரித்தபடி, ஒருவரையொருவர் பார்த்தபடி)
- பின்னணி (Background): படம் எங்கு எடுக்கப்படுகிறது? (காஃபி கடை, கடற்கரை, பூங்கா, மலைப்பகுதி, வீடு)
- ஒளிப்பதிவு: (மென்மையான ஒளி, பிரகாசமான சூரிய ஒளி, மாலை வெளிச்சம்)
- ஸ்டைல்: (போலராய்டு, விண்டேஜ், கார்ட்டூன், அனிம், யதார்த்தம்)
- கூடுதல் விவரங்கள்: போலராய்டு பார்டர், மங்கலான நிறங்கள், குறிப்பிட்ட பொருட்கள் (பூக்கள், புத்தகங்கள், கோப்பைகள்)
ஸ்டெப் 3: படத்தை உருவாக்கவும்
நீங்கள் ப்ராம்ப்ட்டை உள்ளிட்டு "Run" பொத்தானைக் கிளிக் செய்யவும். ஜெமினி AI உங்கள் விளக்கத்தின் அடிப்படையில் படத்தை உருவாக்கும்.
ஸ்டெப் 4: படத்தைப் பதிவிறக்கம் செய்யவும்
படம் உருவாக்கப்பட்டதும், அதை உங்கள்2 மொபைலில்/ லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, உங்கள் கற்பனைக்கேற்ப அழகான படங்களை உருவாக்கி மகிழுங்கள்!