நீங்கள் அடிக்கடி இரயிலில் பயணிப்பவரா? PNR ஸ்டேடஸ் மற்றும் இரயில் எங்கு இருக்கிறது என்பது குறித்த லைவ் ஸ்டேடஸை உங்கள் மொபைலிலேயே தெரிந்துகொள்ளலாம். இப்போதெல்லாம் ஸ்மாட்ஃபோன் இருந்தால் போதும், உலகமே உங்கள் கையில்தான்!
ரயில் பயணிகளின் கவனத்திற்கு...
PNR ஸ்டேட்டஸ் மற்றும் ரயில் வருகை பற்றிய தகவல்களை வாட்ஸ் அப்-ல் காணும் வசதியை ரயிலோஃபி (Railofy) என்ற மும்பையை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்தது.
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மக்களுக்கு இரயில் பயணம் என்றால் ரொம்பவே வசதியாக இருக்கும் என்ற கருதுவர். அதர்கு காரணம் பாதுகாப்பான பயணம், டிக்கெட் விலை, ஜாலியான பயணம் ஆகியவற்றிற்காக தொலைதூர பிராயணத்திற்கு ரயில் பயணத்தை நாடுகின்றனர்.
ரயில் டிக்கெட்கள் உடனடியாக புக் ஆகாவிட்டால், அது குறித்த தகவலை IRCTC-இன் அதிகாரப்பூர்வ வலைதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இப்போது தொழில்நுட்பம் வளர்ச்சியினால், நாம் புக் செய்த டிக்கெட் கன்பார்ம் (confirm) ஆகிவிட்டதா? அல்லது வெயிட்டிங் லிஸ்டில் (Waiting list) -ல் இருக்கிறதா என்பதை அறிவது எளிதாகவிட்டது.
மும்பையைச் சேர்ந்த ஸ்டார்ட்டப் நிறுவனமான Railofy, வழங்கும் வசதியின் மூலம் பயணிகள் PNR ஸ்டேடஸ் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக, ரயிலின் நிகழ்நேர வருகை, டிக்கெட் முன்பதிவின் தற்போதைய நிலை, லைவ் லோகேஷன் உள்ளிட்ட தகவல்களை பெற முடியும்.
https://play.google.com/store/apps/details?id=com.railofy.androidwebview&hl=en_IN&gl=US - இது ரயிலோஃபி ஆப்பிற்கான லிங்க். ஆப் மூலமாகவும் இதை தெரிந்துகொள்ளலாம்.
வாட்ஸ் அப்:
டிக்கெட் PNR எண்ணை +91-98 81 19 33 22 என்ற வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்ப வேண்டும்.
பயணசீட்டின் PNR எண் நிலை நொடியில் உங்களுக்கு கிடைத்துவிடும்.
சேர வேண்டிய ரயில் நிலையம் வந்துவிட்டால், அது குறித்த தகவல், அடுத்த வரவிருக்கும் நிலையம் குறித்த தகவலையும் ரயிலோஃபி தெரிவிக்கிறது. பயணி ஒருவர் முன்பதிவு செய்த ரயிலை தவறவிட நேரிட்டால், நிகழ்நேரத்தில் பயணிக்கும் ரயில்களின் வருகை மற்றும் தாமத நிலை, அந்த ரயிலுக்கான கட்டணம் ஆகியவற்றையும் வாட்ஸ் அப் மூலமே தெரிந்து கொள்ளலாம்.
மேலும், இரயில் நிகழ்கால வருகை குறித்த அப்டேட்களை 139 என்ற கட்டணமில்லா சேவை எண்ணை தொடர்பு கொண்டு அதன் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் என்று இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Zoop- உணவு சேவை:
IRCTC -இன் Zoop சேவையின் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்.
முதலில் Zoop’s வாட்ஸ் அப் சாட்பாக்ஸ் எண்ணை (WhatsApp chatbot number) சேவ் செய்து வைத்துகொள்ளவும்.
சாட் பாக்ஸ் எண் +91 7042062070 .
சாட் பக்கத்தில், Zoop எண்ணிற்கு உங்கள் 10 இலக்க பி.என். ஆர். எண்ணை பதிவிட வேண்டும்.
எந்த ரயில் நிறுத்தத்தில் உங்களுக்கு உணவு டெலிவரி செய்யப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
இதில் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு உணவகங்களின் இருந்து உங்களுக்கு தேவையான உணவை தேர்வு செய்யலாம்.
பேமண்ட் ஆன்லைனில் செலுத்தினால் உணவி ஆர்டர் ஆகிவிட்டது.
இதன்மூலம் நீங்கள் உணவு டெலிவரி குறித்த ஸ்டேடஸை டிராக் செய்யலாம்.