ஆதாரில் உள்ள புகைப்படத்தை மாற்றுவதற்கு முதலில் ஆதார் எடுக்கும் மையங்களில் அப்பாயின்மென்ட் பெற வேண்டும். அதன் பின்னர் குறிப்பிட்ட நாளில் ஆதார் மையத்திற்கு சென்று புகைப்படத்தை எளிதில் மாற்றிக்கொள்ளலாம்.
இந்தியாவில் உள்ள அனைத்துக்குடிமக்களுக்கும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் விளங்கிவருகிறது. ஆதாரில் குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை போன்றவை இருப்பதால், இதனை அனைத்து அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு நாம் உபயோகித்துவருகிறோம். குறிப்பாக வங்கி கணக்கு துவங்குவது, கேஸ் சிலிண்டர் பெறுவது, தடுப்பூசி செலுத்துவதற்குப் போன்ற அனைத்திற்கும் ஆதாரினை நாம் தற்போது பயன்படுத்திவருகிறோம். ஆனால் ஆதார் எடுக்கப்பட்ட காலத்தில் இதுப்போன்று நிலை வரும் என்று யாருக்கும் தெரியாமல் நாம் ஆதாருக்கான போட்டோவை எடுத்திருப்போம். ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை விமானநிலையம், அரசு அலுவலகங்கள், அரசு நலத்திட்ட உதவிகள் என அனைத்திற்கும் ஆதாரை அடிக்கடி உபயோகிப்பதால் புகைப்படத்தை மாற்ற வேண்டும் என்ற மனநிலை பலருக்கு ஏற்படுகிறது. குறிப்பாக ஆதாரில் உள்ள சிலரின் புகைப்படங்களை நம்மால் பார்க்கவே முடியாது. அந்தளவிற்கு மோசமாக இருக்கும். ஆனால் என்ன? எப்படி புகைப்படத்தை மாற்றுவது என்ற கேள்வி அதிகளவில் எழுந்திருக்கும்.
இது ஒன்றும் கடினமான வேலையில்லை. குறிப்பாக இந்தியா முழுவதும் ஆதார் தொடர்பான அனைத்து விபரங்களையும் UIDAI ஆணையம் நிர்வகித்து வருகிறது. இதனைப்பயன்படுத்தி ஆதாரில் முகவரி, மொபைல் எண், புகைப்படம் போன்றவற்றையும் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் முன்னதாக நமக்கு அருகில் உள்ள ஆதார் என்ட்ரோல்மென்ட் மையத்தில் அப்பாயின்மென்ட் பெற வேண்டும். இதோ உங்களுக்கான எளிய முறைகளை இங்கே அறிந்துகொள்வோம்.
ஆதாரில் புகைப்படத்தை மாற்ற ஆன்லைன் மூலம் அப்பாயின்மென்ட் பெறுவதற்கான வழிமுறைகள்:
ஆதாரில் புகைப்படம் மாற்றுவதற்கு முதலில், http://uidai.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
ஆதாரின் முகப்புப்பக்கத்தில் ஆதார் அப்டேட் என்பதை கிளிக் செய்து Book an oppointment என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
இதன் பின்னர், உங்களது மாநிலம், மாவட்டம், உங்களது முகவரி போன்றவற்றை உள்ளீடு செய்து உங்களின் என்ட்ரோல்மென்ட் மையத்தைத் தேடவும்.
இதனையடுத்து உங்களது ஆதாரில் நீங்கள் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு, அப்பாயின்மென்ட் தேதி மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
இந்த நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பிறகு, உங்களது மொபைல் எண்ணுக்கு அப்பாயின்மென்ட் எண் ஒன்று வரும். இப்போது உங்களது அனைத்து வழிமுறைகளும் முடிந்துவிட்டது.
இறுதியாக, உங்களது மொபைல் எண்ணிற்கு வந்திருக்கும் அப்பாயின்மென்ட எண்ணை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட நாளில் ஆதார் மையத்திற்கு சென்று உங்களது புகைப்படத்தை எளிதில் மாற்றிக்கொள்ளலாம்.
ஒருவேளை உங்களால் ஆன்லைனில் அப்பாயின்மென்ட் எப்படி பெற வேண்டும் என்று தெரியாவிடில், நேரடியாக ஆதார் மையத்திற்கு சென்று அப்பாயின்மென்ட் பெற்றுக்கொள்ளலாம்.