பிரபல Apple நிறுவனம் கடந்த திங்கள் கிழமை (நேற்று) நடந்த “Unleashed” MacBook event இல் தனது புதிய படைப்புகளை அறிமுகப்படுத்தியது. ஆப்பிள் நிறுவனத்தின் புராஸசர் தொடங்கி , புதிய சாதங்கள் வரை பல அப்டேட்டுகளை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.






புதிய ஆப்பிள் மியூசிக் பிளான் :


ஆப்பிள் மியூசிக்கை குரல் கட்டளை மூலம் (சிரி) இயக்குவதற்கான புதிய மூன்று சந்தாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலாவதாக ஒரு மாதத்திற்கு $ 5 என்ற வகையில் ஆப்பிள் மியூசிக் லைப்ரரிக்கான குரல்கட்டளை அனுகலை பெறலாம்.  இதில் தற்போதுபுதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பிளேலிஸ்ட்கள் மற்றும் பாடல் கேட்கும் விருப்பங்கள், பாடல் பக்கங்கள், இசை ஆகியவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல  மாதத்திற்கு $ 10 என்ற  திட்டத்தின் மூலம் குரல்கட்டளை அணுகளுடன் லாஸ்லெஸ் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ போன்ற வழக்கமான அம்சங்களும் கிடைக்கிறது. கூடுதலாக $ 15 என்ற கட்டணத்தில் ஆப்பிள் ஃபேமிலியின் அனைத்தையும் குரல் கட்டளை மூலம் இயக்கலாம். மேலும் ஆறு ஆப்பிள் சாதனங்களிலும் ஆப்பிள் மியூசிக்கை குரல்கட்டளை மூலம் பயன்படுத்திக்கொள்ளலாம்.


வண்ணங்களில் HomePod மினி 


ஹோம் பாட் மினி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றுதான். இதன் விலை தற்போது 99 டாலராக உள்ளது. இது வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட இனி நீலம், ஆரஞ்சு, சாமந்தி மஞ்சள் உள்ளிட்ட நிறங்களில் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 






 


 


இயர் பட் 3:


நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மூன்றாம் தலைமுறை இயர் பட்களை ஆப்பிள் தற்போது அறிமுகம் செய்துள்ளது. முந்தைய தலைமுறை மாடலை ஒப்டுகையில் வடிவத்தில் சிறிது மாற்றம் கண்டுள்ளது.அனைவரின் காதுகளிலும் பொருந்தும்படியாக சிறிய வளைவினை கொண்டுள்ளது. மேலும் வாட்டர் ரெஸிஸ்டன்ஸ், நாய்ஸ் கேன்சலேசன் உள்ளிட்ட வசதிகளுடனும் களமிறங்கியுள்ளது.இதில் உள்ள சென்சார்கள் மேம்படுத்தப்பட்ட இசை அனுபவத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இதன் விலை இந்திய ரூபாய் மதிப்பில் புதிய ஏர்பாட்ஸ் 3 விலை ரூ. 18,500 ஆகும். இத்துடன் ஏர்பாட்ஸ் ப்ரோ, மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் புதிதாக ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் சேர்க்கப்படுவதாக ஆப்பிள் அறிவித்து இருக்கிறது.



M1 புராஸசர் :
ஆப்பிள் நிறுவனம் M1 Pro மற்றும் M1 max பெயரில் புதிய பிராசஸர்களை அறிமுகம் செய்து இருக்கிறது. M1 Pro  சிப்செட் அதிகபட்சம் 2 டிஸ்ப்ளேக்களை சப்போர்ட் செய்யும். இதில் 32 ஜிபி யுனிபைடு மெமரி  வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 33.7 பில்லியன் டிரான்சிஸ்டர்கள் உள்ளன.  M1 max மாடலில் 57 பில்லியன் டிரான்சிஸ்டர்கள் உள்ள. இதன்மூலமாக அதிகபட்சம் 64 ஜிபி யுனிபைடு மெமரி கிடைக்கிறது. மேலும்  நான்கு திரைகளை சப்போர்ட் செய்யும் வசதியை வழங்குகிறது. 



புதிய  MacBook Pro மாடல்கள் :


கடந்த ஆண்டு  13-inch  மாடல்   MacBook  ஐ ஆப்பிள் அறிமுகப்படுத்தியிருந்தது. இம்முறை 14-inch MacBook மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது15.5mm தடிமன் மற்றும், 3.5 பவுண்ட் எடையும் கொண்டுள்ளது.  மேலும்Touch Bar வசதியும் இதில் கிடைகிறது.  மேக்புக் ப்ரோ மாடல்களை 14 இன்ச் மற்றும் 16 இன்ச் என இருவித அளவுகளில் அறிமுகம் செய்தது. இது இரண்டிலுமே   M1 Pro மற்றும் M1 max வசதிகள் கிடைக்கின்றன.புதிய மேக்புக் ப்ரோ மாடலில் 1080 பிக்சல் பேஸ்டைம் ஹெச்.டி. கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட வீடியோ அழைப்பினை பயனாளர்கள் மேற்கொள்ளலாம்.


புதிய மேக்புக் ப்ரோ அதிகபட்சம் 8 டிபி வரையிலான ஸ்டோரேஜ், அதிகபட்சம் 64 ஜிபி மெமரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.14-inch மேக் புக்கானது $1,999 டாலர் மதிப்பீட்டில் கிடைக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இதன் பேட்டரி திறன் 15  மனிநேரம் வரை நீடிக்கும். 16 இன்ச் திரைக்கொண்ட மேக் புக்கானது  $2,499 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. தற்போது மேக் புக் விற்பனைக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. வருகிற அக்டோர்பர் 26 ஆம் தேதி முதல் டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.