கூகுள் தொழில்நுட்ப ரீதியிலாக பல்வேறு துறைகளில் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூகுள் ட்ரான்ஸ்லேட் புதிய அப்டேட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கூகுள் ட்ரான்ஸ்லேட் என்ற வசதி மூலம் உங்களுக்கு தெரியாத மொழிகளை தெரிந்த மொழிகளுக்கு மொழிபெயர்த்து கொடுக்கும். இதன் மூலம் பல்வேறு தொடர்பியல் பணிகளுக்கு உதவியாக இருக்கும். உதாரணத்திற்கு தமிழில் சில வார்த்தகைகள் அல்லது கட்டுரையை ஆங்கிலத்தில் வாசிக்க வேண்டும் என்றால் அதை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து தெரிந்துகொள்ளலாம். AI மூலம் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டபோது பல்வேறு துறைகளில் இருப்பவர்களுக்கு உதவியாக இருந்தது. PaLM 2 என்ற பெரிய மொழிபெயர்ப்பு மாடல் மூலம் கூகுள் புதிதாக 110 மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்டுவந்த மொழிகளுடன் இந்திய மொழிகளுடன் 110 மொழிகளை சேர்த்துள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் இணையதள வளர்ச்சி ஏற்றப்பட்டதும் கூகுள் எல்லா துறைகளிலும் தனது சேவைகளை வழங்க தொடங்கியது. அதன்படி, 2006-ம் ஆண்டு கூகுள் ட்ரான்ஸ்லேட் என்ற வசதியை அறிமுகப்படுத்தியது. இது 243 மொழிகளில் சப்போர்ட் செய்யும் ஒன்று. ஒவ்வொரு நாட்டு மக்களின் உள்ளூர் மொழியை அப்படியே மொழிபெயர்க்கும் வசதியை பயனாளர்களுக்கு வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்காக பல்வேறு தொழில்நுட்பங்களை கூகுள் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. எல்லா மக்களும் இந்த வசதியின் மூலம் பயனடைய வேண்டும் என்பதே ஒரே நோக்கம் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022-ம் ஆண்டு Zero Shot Machine என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிதாக 24 மொழிகளை சேர்த்தது.
பிறகு, உலகளவில் பேசப்படும் 1,000 மொழிகளில் AI மூலம் மொழிபெயர்ப்பு வசதியை உருவாக்குவோம் என்ற திட்டத்தை அறிவித்தது. அதன்படி, கூகுள் தனது ப்ளாக்கில் குறிப்பிட்டுள்ளதுபடி, 614 மில்லியன் மக்களும் பயன்படும் வகையில் அத்தனை மொழிகளிலும் மொழிபெயர்ப்பு வசதி கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. உலகில் உள்ள மக்கள் தொகையில் 8% மக்களுக்கு இந்த வசதி கிடைக்கும்படி செய்துள்ளது. Fon, Luo, Ga, Kikongo, Swati, Venda, and Wolf ஆகிய மொழிகளும் ட்ரான்ஸ்லேட்டில் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. Awadhi, Bodo, Khasi, Kokborok, Marwadi, Santali, மற்றும் Tulu ஆகிய ஏழு இந்திய மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.