கூகுள் செயலி மூலம் பணம் அனுப்பும் முறையில், ஒரு எளிமையான மற்றும் தெரிந்து வைத்திருக்க கூடிய முக்கியமான அப்டேட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.
டிஜிட்டல் வளர்ச்சி:
தற்போது, டிஜிட்டல் தொழில்நுட்பமானது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஊடுருவி மிகவும் இன்றியமையாததாக மாறியுள்ளது என்றே சொல்லலாம். உதாரணத்திற்கு, முன்பெல்லாம் பணம் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால் வங்கிக்குச் செல்ல வேண்டும். அதுவும் உடனடியாக பரிமாற்றம் ஆகும் என்றால் , சந்தேகம்தான்.
ஆனால், தற்போது நினைத்த நேரத்தில், இருக்கும் இடத்திலேயே பணம் அனுப்பும் வசதி ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் இணையதளம்தான். அப்படியிருக்க இணையதளம் இல்லாமலும் பணம் அனுப்பலாம் என்கிற, வசதியை கூகுள் பே செயலி கொண்டுள்ளது.
கூகுள் பே:
யுபிஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்தியாவில் உள்ள பல செயலிகள் பண அனுப்பும் வசதியை வழங்குகின்றன.
இதில் கூகுள் பே செயலி மூலம், இணைய வசதியின்றி பணம் அனுப்பும் முறையை பற்றியும் எப்படி அனுப்புவது என்பது குறித்து பார்ப்போம்
முதலில், உங்கள் கூகுள் பே செயலியில் முகப்பு பக்கத்தில் , UPI Lite Activate என்று இருக்கும்; அதை கிளிக் செய்யவும்.
அதன் கீழே வங்கி கணக்கு தேர்வு செய்து கிளிக் செய்யவும்
உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வரும்.
இதையடுத்து, உங்கள் வங்கி கணக்கில் இருந்து, எவ்வளவு பணத்தை UPI Lite என்ற பயன்பாட்டில் சேமிக்க வேண்டும் என கொடுக்கவும்.
உதாரணத்திற்கு , ரூ. 50 கொடுத்தால், உங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ. 50 பிடித்தம் செய்யப்பட்டு, லைட் பயன்பாட்டில் சென்றுவிடும்.
இனி, அவ்வளவுதான்..!, இணையதளம் வேலை செய்யாத இடங்களில் , UPI Lite என்பதன் மூலம் பண பரிமாற்றம் செய்யலாம்.
ஆகையால், நீங்கள் கடைக்குச் சென்றால் இணையதளம் வேலை செய்யாமல் இருந்தாலும், இந்த பயன்பாடு இருப்பதால் கவலை வேண்டாம், இந்த பயன்பாட்டை பயன்படுத்தி கொள்ளுங்கள்.