கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கூகுள் பல ஸ்வாரஸ்யமான அப்டேட்டுகளை கொண்டுவரப்போவதாக அறிவித்திருந்தது. அதில் முக்கியமானது கூகுள் லென்ஸை மேம்படுத்துவது. கூகுள் லென்ஸ் எனப்படுவது கூகுளுடைய புகைப்பட சர்ச் தளமாகும். இதில் டெக்ஸ்ட் டைப் செய்வதற்கு பதிலாக போட்டோவை அப்லோட் செய்வதன் மூலம் சர்ச் செய்ய முடியும். ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு கூகுள் போட்டோஸ் சென்றால் அங்கு கூகுள் லென்ஸ் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். இந்த கூகுள் லென்ஸ் வழியா ஒரு போட்டோ எடுத்தால் அதனுடைய அத்தனை விவரங்களையும் முழுவதுமாக நம்மால் தெரிந்து கொள்ள முடியும். இதன்மூலம் அதில் இருக்கும் டெக்ஸ்ட்டையும் காபி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அப்டேட் என்னவென்றால், கூகுள் லென்ஸைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் டெக்ஸ்ட் மற்றும் இமேஜை பயன்படுத்தி சர்ச் செய்யும் வசதியை புதிய “மல்டிசேர்ச்” அம்சத்தின் மூலமாக பீட்டா பயனர்ககுக்கு கிடைக்கும் என்று கூகுள் அறிவித்துள்ளது. தற்போதைக்கு இது அமெரிக்காவில் மட்டும் கிடைக்கும்படியும், இதன் சோதனை வெற்றி அடைந்த பிறகு கூடிய விரைவில் உலகெங்கும் கொண்டு வரும் திட்டத்தை கூகுள் நிறுவனம் வைத்துள்ளது.
இது எப்படி செயல்படும் என்பது பலருக்கு புரியாமல் இருக்கலாம், அதற்காக ஒரு எடுத்துக்காட்டு: தேடல் பெட்டியில் அதாவது சர்ச் பாக்சில், டைப் செய்வதற்குப் பதிலாக, Google லென்ஸ் மூலம் படத்தை தேர்ந்தெடுக்கவும். உதாரணமாக உங்ககளிடம் ஒரு நீல நிற ஆடை புகைப்படம் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். அதே டிசைனில் உங்ககுக்கு பச்சை நிற ஆடை வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், முதலில் புகைப்படத்தை அப்லோட் செய்துவிட்டு பிறகு அதில் கிரீன் என்று டெக்ஸ்ட் டைப் செய்து சர்ச் செய்தால் உங்களுக்கு தேவையானது கிடைக்கும். இது போல எந்த படமாக இருந்தாலும், அதில் குறிப்பிட்டு நமக்கு எந்த தகவல் வேண்டும் என்பதை உள்ளிட்டு தேடலாம். இப்போது உங்களிடம் ஒரு புதிய மெஷின் உள்ளதென்றால், அதனை எப்படி நிர்வகிப்பது என்று அறிய, அந்த மெஷினை புகைப்படம் எடுத்து அப்லோட் செய்து 'maintenance procedure' என்று டைப் செய்தால் போதும். உங்களுக்கு தேவையான தகவல்கள் வந்து விழும். எனவே இந்த முறையில் நாம் இமேஜையும் டெக்ஸ்ட்டையும் இணைக்கிறோம்.
“டெக்ஸ்ட் மற்றும் படங்களை ஒரே நேரத்தில் உங்களால் பயன்படுத்தமுடியும். இதன் மூலமாக சர்ச் பாக்ஸை தாண்டி, நாம் பார்க்கும் எந்த விஷயத்தை பற்றியும் தேடி தெரிந்துகொள்ள முடியும் ”என்று கூகிள் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவில் (AI) அதன் சமீபத்திய முன்னேற்றங்களால் இந்த புதிய அம்சம் சாத்தியமாகி உள்ளது, "இது நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை மிகவும் எளிதாக புரிந்துகொள்ள வழிவகுக்கிறது. நீங்கள் கேட்கக்கூடிய அனைத்து கேள்விகளுக்கும் முடிவுகளை மேம்படுத்த, எங்களின் சமீபத்திய AI மாடல் - MUM ஆல் இந்த அம்சத்தை மேம்படுத்துவதற்கான வழிகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். உங்களிடம் ஒரு உடைந்துபோன பொருள் இருக்கிறதென்றால், அதனை சரி செய்யும் வழி உங்ககுக்கு தெரியவில்லை என்றால் அதற்காக டெக்ஸ்ட் டைப் செய்து விவரித்து சர்ச் செய்யவேண்டிய அவசியம் இல்லை, புகைப்படம் மூலம் எளிதில் வழியை அறிந்துகொள்ள முடியும்" என்று மேலும் அந்த கூகுள் பதிவு குறிப்பிட்டது. இதன் மூலம் புதிய சகாப்தம் உருவாகும் என்று கூகுள் நிறுவனம் நம்புகிறது. ஆனால் புதிய செயல்பாடு வாய்ஸ் அசிஸ்டண்ட்டுடன் வேலை செய்யாமல் போகலாம் என்று கூறப்படுகிறது.