கூகுள் மேப் விரைவில் சுங்கக்கட்டணம் குறித்த விவரங்களை தனது பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.
கூகுள் மேப் :
உலகின் பல நாடுகளையும் நம்பிக்கையுடன் சுற்றி வருகிறோம் என்றா அதற்கு கூகுள் மேப்தான் பிரதான காரணம். எந்த திசையில் என்ன இருக்கிறது என்பதை அப்படியே படம் போட்டு காட்டிவிடும் . எந்த வழியில் டிராஃபிக் இருக்கிறது , எது எளிமையான வழி என்பதுதான் கூகுள் மேப்பின் வேலை.அதே போல சாலை வழியில் செல்லும் பொழுது எங்கெல்லாம் சுங்கச்சாவடிகள் இருக்கின்றன என்பதையும் நாம் அறிந்துக்கொள்ள முடியுமல்லவா! இனிமேல் சுங்கச்சாவடிகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பது குறித்தும் அறிந்துக்கொள்ள முடியுமாம்.
சோதனை ஓட்டம் :
தற்போது கூகுள் மேப் வாயிலாக சுங்கச்சாவடி கட்டணத்தை அறிந்துக்கொள்ள உதவும் புதிய வசதி சோதனை ஓட்டத்தில் உள்ளது. முதற்கட்டமாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா பயனளார்களுக்கு வரவுள்ளது. கிட்டத்தட்ட 2,000 சுங்கச்சாவடிகளின் கட்டண விவரங்களை முதற்கட்டமாக அறிந்துக்கொள்ள முடியுமாம். ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கு முதற்கட்டமாக அறிமுகமாகவுள்ளது. மேலே குறிப்பிட்ட நாடுகள் தவிர்த்து மற்ற நாடுகளுக்கும் விரைவில் அறிமுகமாகும் என கூகுள் மேப் நிறுவனம் தெரிவித்துள்ளது.