பிரபல கூகுள் நிறுவனம் தனக்கு கீழே இயங்கும் செயலிகளில் புதிய அப்டேட்ஸ்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் 'கூகுள் அசிஸ்டண்ட்' சாதனத்தில் புதிய குழந்தைகளுக்கான குரல்கள் மற்றும் கிட்ஸ் டிக்ஷனரியுடன் புதிய பெற்றோர் கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


9to5Google இன் அறிக்கையின்படி, புதிய பெற்றோர் கட்டுப்பாடுகள் புதுப்பிப்பு, குழந்தைகள் எந்த இசை மற்றும் வீடியோ சேவைகளைப் பயன்படுத்தலாம் மற்றும் அதற்கேற்ப அவர்கள் எந்த வகையான உள்ளடக்கத்தைப் பார்க்கலாம் என்பதைத் தேர்வுசெய்ய பெற்றோருக்கு உதவும் என தெரிவித்துள்ளது.புதிய அம்சம் வரும் வாரங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (குறிப்பிட்ட தேதி எதுவும் வெளியிடப்படவில்லை), மேலும் கட்டுப்பாடுகளை Google Assistant, Family Link ஆப்ஸ் மற்றும் Google Home வழியாக அணுகலாம் . இது Android மற்றும் iOS இரண்டிற்கும் வழக்கப்படவுள்ளது.




கூகுள் தனது அசிஸ்டண்ட்டில்  ‘கிட்ஸ் அகராதி’  என்னும் வசதி இணைக்கப்படுகிறது. இது ஸ்பீக்கர்கள், மொபைல் சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்களில் வயதுக்கு ஏற்ற பதில்களை வழங்கும்.மேலும், "கதைசொல்லலுக்கு உதவுவதற்கும், புரிந்துகொள்ள உதவுவதற்கும் மெதுவான மற்றும் அதிக வெளிப்பாட்டு பாணியில் பேசக்கூடிய" நான்கு குழந்தை குரல்களும் புதிய அப்டேட்டில் இணைக்கப்படவுள்ளன. இதனை  "Hey Google, change your voice என்னும் வசதி மூலம் குழந்தைகள் மாற்றிக்கொள்ளலாம்.


கூகுள் நிறுவனம் சமீப காலமாக தனக்கு கீழ் இயங்கும் செயலிகளில் பல மாற்றங்களை செய்து வருகிறது. ஆண்ட்ராய்டுக்கான ஜிமெயிலில் கீழ் ரிப்பன் லேபிள்களுக்கான வடிவமைப்பு அளவில் சிறிய மாற்றத்தைப் பெறத் தொடங்கியுள்ளதாக 9to5Google என்னும் கூகுள் குறித்த அப்டேட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ஆண்ட்ராய்டில் உள்ள ஜிமெயில் ஆப்ஸ் கீழ் ரிப்பனில் உள்ள ஐகான்களுக்குக் கீழே உள்ள 'லேபிள்கள்' இனி மெல்லக் காணாமல் போகும். ஜிமெயில் பயன்பாட்டில் தற்போது மெயில், அரட்டை, ஸ்பேஸ்கள் மற்றும் சந்திப்பு போன்ற ஐகான்களுக்கு கீழே லேபிள்கள் இடம்பெற்றிருக்கும். வெளியிடப்பட்டுள்ள அப்டேட்டின்படி, சில பயனர்கள் லேபிள்கள் இல்லாமல் ஜிமெயில் பதிப்பை இதன்மூலம் கொண்டுள்ளனர். மேலும் இது இப்போது உலகம் முழுவதும் அதிகமான பயனர்களுக்கு அப்டேட் ஆக உள்ளது.




இதே போல கூகுளின் கீழ் இயங்கும் யூடியூபிலும் புதிய அப்டேட்டை கொண்டுவரவுள்ளது. அதன்  அடிப்படையில்  கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கும் அவர்களை பின் தொடரும் பயனாளர்களுக்கும் எளிமையான அனுகலை வழங்கும் பொருட்டு மூன்று பிரிவுகளை (tabs) அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் ஒரு பிரிவு ஷார்ட்ஸ் வீடியோக்களையும் , மற்றொரு பிரிவு நீண்ட வீடியோக்களையும் , மூன்றாவது பிரிவு லைவ் ஸ்ட்ரீமிங் வீடியோக்களையும் காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கிரியேட்டர்ஸின்  சேனலுக்கு வரும் சப்ஸ்கிரைபர்ஸ்  கண்டெண்டின் தேர்வை எளிதாகக் கண்டறிய இந்த அப்டேட் உதவும் என்று YouTube நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், யூடியூப் சமீபத்தில் புதிய வடிவமைப்பு கூறுகள் மற்றும் தயாரிப்பு அம்சங்களை வெளியிடுவதாக அறிவித்தது, இதில் பிளாட்ஃபார்மில் பயனர் அனுபவத்தை மேம்படுத்த, வீடியோக்களை பெரிதாக்க ( zoom in) மற்றும் வெளியேற்றுவதற்கான ( out for videos) உள்ளிட்ட வசதிகள் இடம்பெறவுள்ளன. இது கிரியேட்டர்ஸ் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.